Header Ads



ஹிஜாப் அணிந்தமையால் கல்லூரியிலிருந்து நீக்கம் - வெடித்தது போராட்டம் - தானாக முன்வந்து வழக்குப்பதிந்த நீதிமன்றம்

ரஷியாவில் ஹிஜாப் அணிந்து வந்ததால் மெடிகல் காலேஜை விட்டு நீக்கம் : செய்தி வெளியான 2 மணி நேரத்திலேயே நடவடிக்கை துவக்கம்!

ரஷியாவின் தாகிஸ்தான் நகரத்தில் அமைந்துள்ள (KURSK STATE MEDICAL UNIVERSITY) மருத்துவக்கல்லூரிக்கு ஹிஜாபுடன் வந்த இஸ்லாமிய மாணவியை இன்று கல்லூரி நிர்வாகம் நீக்கிவிட்ட செய்தி காட்டுத்தீ போல் பரவியதால், கல்லூரி நிர்வாகம் கடும் எதிர்ப்பலைகளை சந்தித்து வருகிறது.

இன்று காலை இந்த செய்தியை, உள்ளூர் தொலைகாட்சி ஒன்று ஒளிபரப்பியதை தொடர்ந்து, பல இடங்களிலும் மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கி விட்டனர்.

கடும் கொந்தளிப்பான சூழலையடுத்து, சமூக ஆர்வலர்கள் பலரும் கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு மாணவி நீக்கத்துக்கான காரணம் கேட்ட போது கல்லூரி நிர்வாகமும் அதை ஒப்புக்கொண்டது.

எங்கள் கல்லூரிக்குள் நுழையும் விதிகள் மீரப்பட்டதாலேயே இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவித்த கல்லூரி நிர்வாகம், கடந்த பிப்ரவரி மாதமே தாங்கள் ஆடை விஷயத்தில் வழி காட்டுதல் நெறிமுறைகளை மாணவர்களுக்கு அறிவித்து விட்டதாகவும், அதில் பர்தா, ஸ்கார்ப் என எந்த வடிவத்திலும் கல்லூரி வளாகத்தில் நுழைய அனுமதியில்லை என தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், தாகிஸ்தான் நகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு பிராசிக்யூட்டர், தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1 comment:

  1. Hijab or Fardha is respected,honured,agreed,welcomed and accepted dress for not only muslim women but also other community women.

    ReplyDelete

Powered by Blogger.