Header Ads



சிறுபான்மை மக்கள், என்று ஒன்றில்லை - கோத்தபாய

ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராக இருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றிரவு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

செய்தியாளர்: ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாரா?

கோத்தபாய: தயார்... தயார்.

செய்தியாளர்: உங்களை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

கோத்தபாய: மகிந்த ராஜபக்ச வருகிறார். விபரங்களை அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

செய்தியாளர்: உங்களை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கோத்தபாய: அது முக்கியமல்ல. நாட்டை எப்படி முன்னோக்கி கொண்டு செல்வது என்பதே முக்கியம். வேட்பாளர் யார் என்பதற்கு பதிலாக மாற்றம் ஏற்பட்ட பின்னர், கொள்கையை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பதே முக்கியமானது.

செய்தியாளர்: ஜெனிவா யோசனைக்கு அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியுள்ளது. அது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

கோத்தபாய: உலகில் உள்ள பிரதான நாடுகள் கூட பயங்கரவாதத்திற்கு எதிராக பயங்கரவாதத்தை எதிர்கொண்டு, பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட்டுள்ளன. அந்நாடுகளை பாராட்டி, அதனை வெற்றி என கருதுகின்றனர்.

எனினும் உலகில் மிகவும் பயங்கரமான பயங்கரவாதத்தை நாங்கள் தோற்கடித்த பின்னர், தோற்கடித்தவர்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர். இது மிகவும் அநீதியானது. இதில் இருந்து உலகம் பாடம் கற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது.

நாங்கள் போரை மட்டும் செய்யவில்லை. போருக்கு பின்னர் பெரியளவில் புனர்வாழ்வு பயிற்சிகளை வழங்கினோம். அவற்றை மறந்து விட்டனர்.

செய்தியாளர்: நீங்கள் உங்களது வெளிநாட்டு குடியுரிமையை கைவிடுவீர்களா?.

கோத்தபாய: அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்.

செய்தியாளர்: சிறுபான்மை இனத்தவர்களின் ஆதரவு எப்படி இருக்கின்றது?

கோத்தபாய :சிறுபான்மை மக்கள் என்று ஒன்றில்லை. இலங்கையர்கள் என்ற வகையில் அனைத்து இனங்களுக்கும் தற்போதைய அரசாங்கம் எதனையும் செய்யவில்லை. நாங்கள் பொதுவாகவே இந்த பிரச்சினையை அணுகுவோம்.

செய்தியாளர்: முழு நாடும் உங்களது தயார் நிலை குறித்து எதிர்பார்த்துள்ளது?

கோத்தபாய: மிகவும் நல்லது.

9 comments:

  1. நயவஞ்சகர்கள் அல்லது முனாபிக்குகள் நரகத்தில் மிக மோசமான நரகத்தில் தள்ளப்படுவார்கள் அவர்களின் முக்கியமான அடையாளங்கள் நான்கு என நபி(ஸல்) கூறினார்கள். 1. பேசினால் பொய் பேசுவான். 2. வாக்களித்தால் மாறு செய்வான் 3. நம்பினால் துரோகம் செய்வான் 4. விவாதத்தில் ஈடுபட்டால் தூஷணம் பேசுவான். இந்த கெட்ட குணங்களில் ஒன்றாவது ஒருவனிடத்தில் இருந்தால் அவனும் முனாபிக்தான். நாமும் இந்த ஆபத்தான அடையாளங்களில் இருந்து எம்மையும் பாதுகாத்துக் கொள் வோம்.இதே குணம் உள்ள அடுத்தவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருப்போம்.

    ReplyDelete
  2. finding words to get minority vote... after all racism done in the past...sorry sir

    ReplyDelete
  3. True Muslims fall into a pit only one time

    ReplyDelete
  4. சிறுபான்மையை அழித்தொழிப்பது தானே உங்கள் வேலை. உங்கள் வேலை முடிந்த பின் சிறுபான்மை என்று ஒன்றில்லைதான்.

    ReplyDelete
  5. Ajan போல் மீதமாக இருக்கும் சில பயங்கரவாதிகலுக்காக கட்டாயமாக அவர் வரவேண்டும்.ரனில்,வந்ததும் இந்த Ajan பயங்கரவதி மீண்டும் வந்து விட்டான்

    ReplyDelete
  6. தமிழ் பயங்கரவாதத்தை முற்றாக துடைக்க மீண்டுமொருமுறை இவர்களின் ஆட்சி தேவை. இவர்கள் மீது பல விமர்சனங்கள் காணப்பட்டாலும் கொடூரமான தமிழ் அடிப்படைவாதிகளை திருத்துவதே இன்றைய தினத்தில் முக்கியமானதாக இருக்கின்றது

    ReplyDelete
  7. @Gtx W, அப்போ, கிழக்கில் உள்ள ISIS யை என்ன பண்ணுரது என்றும் ஆலோசனை தாருங்களேன்?

    ReplyDelete
  8. Ajan பாசிச புலி உனக்கு மிக விரைவில் இருக்கு சட்ட நடவடிக்கை.முல்லிவாய்க்காலில் சொந்த இனத்தய பலிக்கடாவாக்கிய புலிகலடா நீங்க.

    ReplyDelete
  9. கிழக்கினை ஶ்ரீலங்கா அரசாங்கம்,ராணுவம் பார்துக்கொன்ண்டிருக்கிரார்கல்.அவர்கழுக்கு தெரியாத isis உனக்கு தெரியுமா? பாசிச புலி ajan முதலில் உன்னை arrest பன்ன்வெனும்

    ReplyDelete

Powered by Blogger.