Header Ads



துருக்கியை தாக்கினால் சவப்பெட்டியே அவர்களின் வீட்டுக்கு போகும் என எச்சரிக்கை - பயங்கரவாதியின் இலக்கு எர்டோகனா..??

நியூசிலாந்தில் உள்ள முஸ்லிம்களின் மீதான படு கொலை தாக்குதல் துருக்கியின் மீதான ஒரு பரந்த மறைமுக தாக்குதலின் ஒரு பகுதியாகும் எனவும் படுகொலை பற்றிய தீவிர விசாரணையைத் தொடர வேண்டும் என நீயூசிலாந்து அரசுக்கு துருக்கியின் அதிபர் ரெசெப் டெய்யிப் எர்டோகன் கோரிக்கையை முன் வைத்தார்.

வெள்ளிக்கிழமை அன்ரறு ஒதுப்பாக்கி ஏந்திய பயங்கரவாதி மசூதி மீது நடத்திய தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50 பேர் காயமுற்றனர் தாக்குதலுக்குள்ளான கிறிஸ்ட்சர்ச் நகரில் இரண்டு மசூதிகளும் நியூசிலாந்தின் தென் தீவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு நகரமாகும்

மேலும் இந்த தாக்குதலானது நியூசிலாந்தில் நடந் மிகப்பெரிய தாக்குதலாக கருதப்படுகிறது

பிரெண்டன் டாரன்ட் என தன்னை அடையாளம் காட்டிய 28 வயதான ஆஸ்திரேலிய குடிமகனான பயங்கரவாதி ஆட்கொணியாளர் தி கிரேட் ரெஸ்ப்ளேஸ்மென்ட் என்ற தலைப்பில் ஒரு விரிவான அறிக்கை ஒன்றை எழுதி இருந்தான் அதில் அவன் துருக்கி மக்களின் பழமையான எதிரிகளை குறிபௌபிட்டு துருக்கிய ஜனாதிபதியை போர் வீரராக வர்ணித்திருந்தான்

அவ் அறிக்கையில் நாங்கள் கான்ஸ்டான்டிநோபில் வருகிறோம் நாங்கள் ஒவ்வொரு மசூதியையும் நகரத்தில் உள்ள ஒவ்வொரு மினரையும் அழிக்கப்போகிறோம்.ஹாகியா சோபியா மினாரட்ஸை விடுவிப்பார் கான்ஸ்டான்டினோபிள் சரியான முறையில் கிரிஸ்துவர் சொந்தமாக இருக்கும் என்று அவனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது

அவன் குறிப்பட்ட நகரமானது துருக்கியின் வடமேற்கு ஐரோப்பியப் பகுதியிலிருந்து துருக்கியர்களின் இயக்கத்தில் இருக்கும் துருக்கி நாட்டின் தலை நகரங்களில் ஒன்றான இஸ்தான்புல் நகரமாகும் இது முஸ்லிம்கள் பெரும்பான்மை வசிக்கும் துருக்கி நாட்டின் மிகப்பெரிய நகர்ப்புற மையமாகும் மேலும் அவன் துருக்கி அதிபர் எர்டோகன் ஆகியோருக்கு எதிராக அச்சுறுத்தல்களையும் அவன் அறிக்கையில் பிறப்பித்திருந்தான்

திங்களன்று, 1915 ஆம் ஆண்டு கால்பொலியை நினைவுகூறும் வடகிழக்கு மாகாணமான காக்காலேயில் நடந்த ஒரு பேரணியின் பிரச்சாரத்தில் உரையாற்றிய எர்டோகன் ஒட்டோமன் படையினர் வசம் இருந்த தீபகற்பத்தை கைப்பற்ற முயற்சித்த பிரித்தானிய தலைமையிலான படைகளான ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து துருப்புக்கள் தோல்வியை தழுவியது எனவும்

நாங்கள் 1,000 வருடங்கள் இங்கு இருந்திருக்கிறோம், அல்லாஹ்வின் அருள் இருக்கும் வரும் வரை இங்கு இருப்போம் என்று துருக்கி அதிபர் எர்டோகன் அவர் கூறினார்

மேலும் நீங்கள் இஸ்தான்புல் நகரை கான்ஸ்டான்டிநோபல்லாக மாற்றிவிடமாட்டீர்கள் என்றும் 1453 ல் முஸ்லீம்களின் ஓட்டோமன்ஸ் பேரரசு வெற்றிபெறுவதற்கு முன்னர் அது கிறிஸ்தவ பைஸாண்டிய ஆட்சியாளர்களின் கீழ் கான்ஸ்டான்டிநோபல்லாக இருந்து என எர்டோகன் கூறினார் மேலும் உங்கள் தாத்தா பாட்டி இங்கே வந்து அவர்கள் அண்மனையிலேயே திரும்பி போய்விட்டார்கள் என்றும் எர்டோகன் கூறினார் மேலும் அவர் தொடர்ந்து கூறுகையில் உங்கள் தாத்தாவைப் போல உங்களையும் நாங்கள் சவப் பெட்டியில் அனுப்பி வைப்போம் என்பதில் சந்தேகமே இல்லை என அதிபர் எர்டோகன் எச்சரிக்கை செய்தார்

மேலும் கூறிய துருக்கிய அதிபர் இந்த சோக நிகழ்வை மேலும் தடுக்க முழுமையான விசாரணையைத் தொடர வேண்டும் எனவும் மற்றும் இந்த விடயத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளவும் என நியூசிலாந்தின் அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்தார்

இந்த பிரச்சினையை நியூசிலாந்து அரசாங்கம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் மேற்கத்திய நாடுகளைப் போல அவர்கள் அதை சிறிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது இந்த விவகாரத்தை நியூசிலாந்தின் கவர்னர் ஜெனரல் பட்ஸி உடன் பகிர்ந்து கொண்டேன் எனவும் அவர் தெரிவித்தார்

2016 ல் இருமுறை துருக்கிக்கு அந்த கொலைகாரன் பயங்கரவாதி விஜயம் செய்திருந்ததாக துருக்கியின் புலனாய்வை மேற்கோள் காட்டி அதிபர் எர்டோகன் கூறினார்

கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதற்கு வருகை தந்தத மக்களும் உலகெங்கிலும் உள்ள முஸ்லீம்களும் துருக்கி மக்களும் கவலையடைவதாக துருக்கிய வெளியுறவு அமைச்சர் மெவலுத் கவுசோக்லு திங்களன்று கூறினார்.

Mohamed Jawzan

No comments

Powered by Blogger.