Header Ads



பால் மாவை,, தவிர்ப்பார்களா முஸ்லிம்கள்...??

இன்றைய சூழ்நிலையில் இலங்கையில் பேசப்படக்கூடிய 3 தலைப்புக்களில் (பால்மா, மாகந்துரே மதூஷ்,  குசல் ஜனித் பெரேரா) முக்கியத்துவம் சமூகத்தால் குறைவாக வழங்கப்படக்கூடிய விடயம்தான் இந்த பால்மாவில் அடங்கியுள்ள இரசாயன பதார்த்தங்கள் பற்றிய விவகாரம்.

உண்மையில் இந்த விடயத்தை வெளியில் கொண்டுவந்த புத்திக பத்திரன பிரதி அமைச்சருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கின்றோம். ஏனெனில் நாம் சுகாதார துறையில் பணிபுரிபவர்கள் என்ற வகையில் சமூகத்துக்கு தொடர்ந்தும் கூறிவரும் விடயம் தான் இரசாயன பதார்த்தங்கள் அடங்கியுள்ள உணவுப்பாவனையை தவிர்த்து உண்ணாட்டு உணவு வகைகளை, ஆரோக்கியமான தூய உணவு வகைகளை சாப்பிடவும் குழந்தைகளுக்கு வழங்கவும் பழகுங்கள், மாறாக விளம்பரங்களுக்கு ஏமாந்து ஆரோகியம் என்ற பெயரில் இரசாயன் பதார்த்தங்கள் அடங்கிய உணவுகளால் அநியாயமாக தற்கொலை செய்துகொள்ளாதீர்கள்(மேற்கத்தேய தேவையின் அடிப்படையில் தான் முழு உலகமும் இன்று இயங்கிக்கொண்டிருக்கின்றது அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வது, ஆராய்ச்சிகளை மேற்கொள்வது இந்த மூன்றாம் உலக நாடுகளை பலிக்கிடாவாக வைத்துதான்) என்பது. அவர் பாராளுமன்றில் குறிப்பிட்ட விடயங்களில் தெரிவித்த முக்கிய பல விடயங்களை நாம் கருத்தில்கொள்ளல் வேண்டும்.

பன்றிக்கொழுப்பு அடங்கியுள்ளமை

மெலமைன் மற்றும் DCD அடங்கியுள்ளமை சுகாதார அமைச்சுப் பணிப்பாளர் ஓய்வுபெற்ற உடனேயே fபொண்டெரா நிறுவன பணிப்பாளரானமை.

fபொண்டெரா நிறுவன அதிகாரிகளின் அச்சுறுத்தல்மிக்க பேச்சு.
அபிவிருத்தியடைந்த நாடுகளில் பால்மா என்ற நாமத்துக்கே இடமில்லாதிருத்தல்.

இவற்றை உற்றுநோக்கும்போது, உண்மையிலே இவற்றுள் ஒருசில விடயம் இல்லாமலிருந்தாலும், பால்மாவிலுள்ள நன்மை மற்றும் பூச்சியம் என்பது இறுதியும் உறுதியானதும் ஆகும்.

முதலாவது விடயம், பன்றிக்கொழுப்பு விடயம் பொய்யென நமது துறை சார் நிபுணர்கள் உடனடியாக காணொளி ஊடாக அது பொய் பன்றிக்கொழுப்பு இல்லை என்பதை உறுதியாக தெரிவித்து அதன்படி ஹலால் என்பதையும் தெளிவுபடுத்தியிருந்தனர். எனினும் நமது நிபுணர்கள் ஒரு விடயத்தை மறந்துவிட்டார்கள் என நினைக்கின்றேன். இங்கு பால்மாவில் அடங்கியுள்ள இரசாயன பதார்த்தங்களால் இன்னின்ன உபாதைகள், கோளாறுகள், குறைபாடுகள், நோய் நிலைகள் வரும் என்று தெரிந்துகொண்டு அதனை உட்கொண்டு அதனால் பாதிப்பு காலக்கிரமத்தில் எம்மையறியாமலே ஏற்படும் பட்சத்தில், அல்லது உயிராபத்து ஏற்படும் பட்சத்தில், (சிகரட்டுக்கு கொடுத்த fபத்வாவைப்போன்று) பால்மா ஹலால் ஆகுமா என்ற சந்தேகம் என்னில் நிலவுகின்றது.

இரண்டாவது விடயம் இதில் சேர்க்கப்பட்டிருக்கும் இரசாயன பதார்த்தங்கள் (சொல்லப்பட்ட மற்றும் சொல்லப்படாத, உடலுக்கு உகந்த மற்றும் ஒவ்வாத) எந்த வகையில் எமக்கு உகந்தது மற்றும் ஊறுவிளைவிக்கத்தக்கது என்பது பற்றி எமது சமூகம் ஒரு போதும் சிந்திப்பதேயில்லை.

உதாரணமாக மெலமைன், நீண்ட காலம் வைத்திருக்க பயன்படுத்தும் திரவியங்கள், DCD மற்றும் நிறத்தை பேணுவதற்காக பயன்படுத்தும் திரவியங்களை நாம் தொடர்ச்சியாக நேர்மறையாக (குறித்த உணவுகளை உட்கொள்வதன் ஊடாக) இவ்வாறு உட்கொள்வதால்தான் இன்று சமூகத்தில் பரவலாக உலாவரும் புற்றுநோய், சிறுநீரக நோய், மற்றும் பல காரணம் அறியப்படாத திடீர் மரணங்கள் அதிகரித்திருப்பதற்கான பிரதான காரணிகளில் ஒன்று என்பதை கருத்தில் கொள்ளல்வேண்டும்.

அத்துடன் பால்மாக்களில் இருப்பதாக சொல்லப்படும் விட்டமின்கள், கனியுப்புக்கள், ஏனைய புரதங்கள் மற்றும் போசணைப் பதார்த்தங்கள் உண்மையிலே இருக்கின்றனவா என்றால் அது கேள்விக்குரிய விடயமாகும், ஏனெனில் அங்கு அவ்வாறான போசணைப் பதார்த்தங்கள் இல்லை என்பது மட்டுமன்றி பால்மா அருந்துவதால் ஒருசில நோய்கள், குறைபாடுகள் இல்லாமல் போகும் என்ற விடயம், கசப்பான பொய்யுமாகும் (மாறாக நோய்கள் உருவாகும் அளவு அதிகரிக்கும்) என்பதும் ஆராய்ச்சிகளில் உறுதி செய்யப்பட்ட விடயமாகும்.

மூன்றாவது மற்றும் நான்காவது விடயங்களில் இருந்து புலப்படுவது என்னவெனில் உண்மையிலே பால்மா என்பது 100% பணத்துக்கான அல்லது வியாபாரப் பொருளேயன்றி வேறில்லை என்பதுடன், மூன்றாம் உலக நாடுகளை பயன்படுத்தி காசு படைக்கும் வேலையை செவ்வனே அவர்கள் நிறைவேற்றுகிறார்கள் என்பதாகும். (சூர்யாவின் மாற்றான் திரைப்படத்தை நினைவுபடுத்திப் பார்க்கத்தோன்றுகின்றது)

ஐந்தாவது விடயம் உண்மையில் எங்கிருந்து நாம் பால் மாவை இறக்குமதி செய்கிறோமோ அங்கு இந்த பால்மா வகைகள் இருக்கின்றனவா (இல்லை) என்ற விடயமாகும். இந்த விடயத்தை சற்று நோக்கினால் மேலே பேசிய விடயங்கள் அனைத்தினதும் உண்மைத்தன்மை உறுதியாகும்.

குறித்த அந்த நாடுகளில் தூய பசும்பாலும் ஆட்டுப்பாலுமே பயன்படுத்தப்படுவதுடன், அதுவும் குறித்த பால் கறக்கப்படும் தினத்திலேயே பயன்படுத்தும் வகையிலே அமைந்துள்ளதுடன்(எவ்வித இரசாயனப் பதார்த்தங்களும் அற்றதாக) , நாம் பெருமையுடன் பயன்படுத்தும் பால்மா சந்தையில் எங்குமே கிடைக்கப்பெறாது என்பதை நம் அனேகமானவர்கள் அறியாத விடயமாகும். மாறாக அவர்கள் ஏற்றுமதி செய்யும் பால் மா அளவை பார்க்கும்போது உதாரணமாக நியுசிலாந்தில் தினமும் கறக்கும் பாலின் அளவிலும் பன்மடங்கு எவ்வாறு நாளாந்தம் ஏற்றுமதி செய்கிறார்கள் அடுத்த கேள்விக்குறிய (பல சந்தேகங்களை உருவாக்கும்) விடயமாகும். 

இவ்வாறான நிலையில் சமூகம் எனும் வகையில் நாம் செய்ய வேண்டியது என்னவெனில், இந்த பால்மாவுக்காக கோடிக்கணக்கான டொலர்களை நாம் வெளிநாடுகளுக்கு கொடுத்து வருகின்றோம். அதனை நிறுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக இதனை பயன்படுத்த வேண்டும். அத்துடன் மனிதர்களைப் பொறுத்தமட்டில் பால் என்பது 2 வயதுக்குப்பிறகு கட்டாயமான உணவு ஒன்றல்ல, இருப்பினும் தேவைப்படுமாயின் தூய பசுப்பாலை அருந்தப்பழகுவது சாலச்சிறந்ததாகும்.

எமது எதிர்கால சந்ததியினரின் அரோக்கியம் பற்றி அக்கறை எமக்கிருப்பின் நாம் எடுக்கவேண்டிய அறிவார்ந்த முடிவு பால்மாவை முற்றிலும் தவிர்த்து தேவைப்படின் தூய பசுப்பாலை அருந்தப் பழகுவதேயாகும்.

- Dr. Fazl Ul Haque M Fouze -

6 comments:

  1. even in United kingdom Anchor milk powder banned to sell.

    ReplyDelete
  2. Following points are suggested regarding to the above letter.
    1.This too long to read for all ordinary people.
    2. Govt of SL should banned if chemical contained with valid proof .
    3.what is the different between animal fat VS chemical.
    4.Authorities LIke JU must give the FATWA & order to stop purchasing of Anchor milk for muslims
    Thanks

    ReplyDelete
  3. "The Muslim Voice" fully agrees to the issues raised in the above article written by Dr. Fazl Ul Haque M Fouze and wishes that the Muslim community should follow the advice given, Insha Allah. "The Muslim Voice" alo wishes to repeat it's stand on the issue, Insha Allah.
    “WITHOUT PREJUDICE”
    Dr. Rajitha Seneratne - Health Minister and FONTERRA should NOT try to “HOODWINK” the Muslim community like the All Ceylon Jamiyathul Ulema-ACJU and the The Halal Accreditation Council (Guarantee) Limited, a non-for-profit company established by the ACJU which calls itself as the Halal compliant certification issuing body in Sri Lanka. Dr. Rajitha Seneratne should NOT put forward "blame" excuses to discredit President Maithripala Sirisena's action against the faulty Milk powder producers and the distributors. ACJU - The Halal Accreditation Council (Guarantee) Limited, should NOT try to “HOODWINK” the Muslim community. The certification produced by the ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited, is doubted to be "not true". Thailand is a country where you can buy any such "CERTIFICATIONS" by paying money, it is alleged. The President and the authorities handling this matter should not be duped by these "DECEPTIVE" Muslim hoodwinkers and the ACJU.
    The Muslim community in Sri Lanka has to be greatfull to the Hon. Minister for revealing this information in the “floor of the parliament”.
    It is a “HYPOCRATIC AND SHAMEFULL” statement that the ALL CEYLON JAMIYATHUL ULEMA (ACJU) operated sister NGO – The Halal Accreditation Council (Guarantee) Limited, a non-for-profit company established by the ACJU which calls itself as the Halal compliant certification issuing body has “FALSELY” made statements certfying the Milk powder alleged to contain Lactose and Pig Oil to be “HALAL”.
    This is the greatest “DECEPTION and HOODWINKING to “DUPE” the Muslim community the All Ceylon Jamiyathul Ulema had done to our community. A PRESIDENTIAL COMMISSION SHOULD PROBE THE CORRUPTION OF THE ACJU, THE ILL EARNINGS THEY ARE MAKING BY PROVIDING FALSE HALAL CERTIFICATIONS AND THE ACTIVITIES OF THE The Halal Accreditation Council (Guarantee) Limited, a non-for-profit company established and operated by the hierarchy of the ACJU. http://www.adaderana.lk should use the RTI act to obtain the necessary informations about the activities of the ACJU and the Halal Accreditation Council (Guarantee) Limited, a non-for-profit company established and operated by the hierarchy of the ACJU.
    “THE MUSLIM VOICE” “DEMANDS” THE TRUTH FROM THE MILK IMPORTERS AND THE MANUFACTURERS/EXPORTERS ABROAD” TO REVEAL THE TRUTH TO THE MUSLIM COMMUNITY.
    “THE MUSLIM VOICE” also requests/appeals all Muslims in Sri Lanka to “BOYCOTT” the purchasing of this type of Powdwred Milk that has leaked into the market, as stated by the Hon. Minister Budikka Pathirana – Deputy Minister of Trade and Commerce.
    “THE MUSLIM VOICE” wishes to state that it fully endorses and support Hon. Budikka Pathirana’s statement in parliament.
    Noor Nizam.
    Convener – “The Muslim Voice”.

    ReplyDelete
  4. துய பசு பால்? பசுக்களைதான் கொலை செய்து திண்னு விடுகிறீா்களே முழு மாட்டையும் முழுசா முழுங்கினா எப்படி பசு பால் தரும் முதலில் பசுக்களை கொள்வதை நிறுத்து பின்பு பால் தரும்

    ReplyDelete
  5. Thanks Bro Noor Nizam for your relentless pursuit of this matter: Sri Lankans are being used as Gunea Pigs; this Milk Powder is a kind of slow poisoning, the imported powder milk should be totally banned from distribution into the market and every citizen of Sri Lanka should completely refrain from using it even for their pet animals & birds. Govt. should initiate actions against this unscrupulous rogue organisation that is issuing FAKE Halal certificates guaranteeing milk powder and may be many other consumer goods.

    ReplyDelete

Powered by Blogger.