Header Ads



பள்ளிவாசல் மீதான தாக்குதலில், தம்பியை இழந்த சகோதரரின் வாக்குமூலம்

நியூசிலாந்து துப்பாக்கிச்சூட்டில் தனது தம்பி உயிரிழந்தார் என்பதை கொலையாளி கொலைகள் செய்யும்போது வெளியிட்ட வீடியோவை மீண்டும் பார்த்த பின்னரே அண்ணன் அறிந்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Christchurch நகரில் கடந்த வெள்ளிக்கிழமை மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக அவுஸ்திரேலியாவை சேர்ந்த பிரண்டன் டரண்ட் (28) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த 50 பேரில் அஷ்ரப் அலி (58) என்பவரும் ஒருவராவார்.

அஷ்ரப் சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் Fijiயில் இருந்து தனது அண்ணன் ரம்ஜானை காண நியூசிலாந்து வந்தார்.

இந்நிலையில் இருவரும் மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்திய போது துப்பாக்கிச்சூடு நடந்தது.

இதில் ரம்ஜான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் அவர் தம்பி அஷ்ரப் உயிரிழந்தார்.

இது குறித்து ரம்ஜான் கூறுகையில், துப்பாக்கிச்சூட்டின் போது நான் அங்கிருந்த பெஞ்சுக்கு பின்னால் ஒளிந்து கொண்டேன், பின்னர் ஜன்னல் வழியாக வெளியே குதித்து தப்பித்தேன்.

அந்த மசூதியிலிருந்து இறுதியாக உயிர் தப்பியது நான் தான் என நினைக்கிறேன்.

என் தம்பி அஷ்ரப் 95 சதவீதம் இறந்திருப்பார் என நினைத்தேன், 5 சதவீதம் அவர் பிழைத்திருப்பார் என நம்பினேன்.

பின்னர் கொலையாளி துப்பாக்கிச்சூடு நடத்தியதை நேரலை செய்த வீடியோவை மீண்டும் பார்த்தேன், அதில் அஷ்ரப் சடலமாக கிடந்தததை பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.

என் வாழ்நாளில் கண்ட மிகபெரிய அதிர்ச்சி இதுதான். அஷ்ரப்பின் முதல் மனைவி 3 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த நிலையில் இரண்டாவது மனைவி 3 மாதங்களுக்கு முன் இறந்தார்.

அவர் சொந்தமாக டாக்சி நிறுவனம் வைத்திருந்தார், மிகவும் திறமையான தொழிலதிபராக அவர் இருந்தார் என கூறியுள்ளார்.

இதனிடையில் அஷ்ரப்பின் சடலம் அவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.