Header Ads



மீண்டும் ஒரு கலவரம் வரட்டும், அப்போது ஒன்று கூடுவோம், அதுவரை இப்படியே இருப்போம்...


- றிஸ்வான் -

இன்றும் விடிந்தது
இரவும் முடிந்தது..

நாட்கள் நகர்கின்றன.
நமக்கேது பிரச்சனை.

என்னுடைய தொழில்...
என்னுடைய குடும்பம்.
எனக்குரிய நேரங்கள்,
என்னோடு நடக்கின்றன.
நமக்கேது பிரச்சனை?

நாமிங்கு நலம்.

சுவையான வரலாறுகள்
சுகமாக பேசுவோம்..
ஊரின் பசுமை பற்றி
பக்கம் பக்கமாக எழுதுவோம்..

பள்ளிவாசலில் பிரச்சனையா 
தள்ளிக்கொண்டு முன்னே செல்வோம்...

பாடசாலை பற்றி
விமர்சனங்களை
விலாவரியாக விளக்கிச்சொல்வோம்...

நாற்றமடிக்கும் குப்பை கண்டால்
மந்திரிக்கு தொலைபேசி.
பாதையெங்கேனும் குழாய் உடைந்திருந்தால்
நாங்களே தொழிலாளி.

பீச்சில் மாற்று மதத்தான் 
பியர் குடித்தால்
வட்ஸ்அப் அலறும்.
ஊரின் ஒழுக்க பண்பாடு பற்றி
இரண்டு முன்று நாள் கதறும்.

நாங்கள் நல்லவர்கள் தான்..
தீயதை தட்டிக்கேட்கும்
வல்லவர்கள் தான்...

அப்படியிருந்தும்..
இப்போது ஏனிந்த மௌனம்???

விளையாட்டில்
எங்களூர் வீரர்கள்
வென்றுவரும் போது கைதட்டி வரவேற்றோம்...
வெளிநாடுவரை எங்களூர் பேரை 
கொன்று சிதைக்கும் போது
கைகட்டி வாய்பொத்தி இருக்கிறோம்...

ஏனிந்த மௌனம்...

மீண்டும் ஒரு இனக்கலவரம் வரட்டும்.
அப்போது ஒன்று கூடுவோம்..
அதுவரை இப்படியே இருப்போம்...

நமக்கேது பிரச்சனை?

4 comments:

  1. The community that is divided on petty groups, jamaths,& movement ideologies will not survive this racial attack we have given them gold opportunities to divide us & rule,

    ReplyDelete
  2. Mr. Unknown, very well said. Agreed

    ReplyDelete
  3. பலகத்துறை கவிஞர் ரிஸ்வானின் காலத்துக்கேற்ற கவிதை அருமை. சமூகத்தின் அவல நிலை கண்ட அவரது மனக் குமுறல் கவிதையாகப் பீறிடுகின்றது.

    ReplyDelete
  4. Mr. Unknown, very well said. Our ummah is busy collecting majority for their jammath, they divided between them and divided the our ummah.

    ReplyDelete

Powered by Blogger.