Header Ads



தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழு, உறுப்பினராக நஹியா நியமனம்

கல்விமான் A.M. நஹியா அவர்கள் இன்று (14) இலங்கை தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் சிரேஷ்ட முஸ்லிம் உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். 

தேசிய அரசியலமைப்புச் சபையின் ஆலோசனைக்கமைவாக  ஜனாதிபதியினால் இந்நியனம் வழங்கப்பட்டது. 

இந்நியமனத்தின் மூலம் தான் பிறந்த மண்ணிற்கு பொன் மகுடம் சூட்டியதோடு இலங்கை முஸ்லிம்களுக்கே தேசிய ரீதில் உயர் கௌரவம் பெற்றுக் கொடுத்துள்ளார்.

ஏற்கனவே இருமுறைகள் அரச சேவைகள் ஆணைக்குவின் உறுப்பினராக உயர் பணியாற்றிய இவர் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் பிரதி அதிபருமாயிருந்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் டிப்ளோமா (PGDE) தத்துவ முதுமானி(M.phil) பட்டங்களைப் பெற்ற இவர் பணிப்பாளர் நாயகம் புனர் வாழ்வு அமைச்சு,  மீனவர் வீடமைப்பு மீனவர் நலன் ஆகியவற்றிலும், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் ஆலோசகராகவும் பணியாற்றினார்.

பன்மொழி வித்தகரான நஹ்யா அனுராதபுரம் புத்தளம் குருநாகல் அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பயங்கர வாதத்தால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் கல்வி எழுச்சிக்காய் பல நூறு கல்விக் கூடங்களை உருவாக்கி அரும்பணி புரிந்துள்ளார்.

சாதிமத பாகுபாடற்ற இவர் தமிழ் மொழிக்கும் அரும் தொண்டாற்றியுள்ளார். அஸீஸும் தமிழும் முஸ்லிம் நேசர் சுவாமி விபுலாநந்தர் முஸ்லிம் நிழலில் மூதறிஞர் ஷாபிமரிக்கார் சிந்தனையும் பங்களிப்பும் போன்ற புத்தகங்களை யார்த்ததுடன் நாட்டடின் தலைசிறந்த கல்விமான்களின் மாணாக்கராகவும் நண்பராகவும் திகழ்கிறார்.

கொழும்பு பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்லைவராகத் தெரிவு செய்யப்பட்ட முதல் முஸ்லிமான இவர் கொழும்பு ஸாஹிறாவின் ஏணிகளில் ஒருவராவார்.

நாடறிந்த தலைசிறந்த கல்விமானாகிய A.M.நஹியா அவர்கள் நிந்தவூர் 18ம் பிரிவைச் சேர்ந்த மர்ஹும்களான முஹம்மட் தம்பி ஆதம் லெப்பை சுலைமா லெப்பைப்போடி பாத்தும்மா ஆகியோரின் புதல்வராவார்.

(சுலைமான் றாபி - நிந்தவூர்)

No comments

Powered by Blogger.