Header Ads



சஜித்திற்கு அதிசயமான வகையில், ரணில் புகழாரம்

அரசினால் வழங்கப்படும் கௌரவ விருதுகளைவிட சமய நிறுவனங்களால் வழங்கப்படும் கௌரவ விருதுகள் மிகவும் சிறப்பானதாகும் என பிரதமர் ரனில் விக்கரமசிங்க தெரிவித்தார்.

கண்டி மல்வத்தை பௌத்த பீடத்தில் இன்று  -31- இடம்பெற்றவைபவம் ஒன்றிலே இதனைத் தெரிவித்தார். 

அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு மல்வத்தை பௌத்த பீடத்தினால் (ශාසන දීපන අභිමානී ශ්‍රීලංකා ජනරංජන) சாசன தீபன அபிமானி ஸ்ரீலங்கா ஜனரஞ்சன என்ற உயர் கௌரவ விருது வழங்கப்பட்டது. அவ்வைபவத்திலே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, 

அமைச்சர் சஜித் பிரேமதாச தமது தந்தையின் அடிச்சுவட்டைப் பின் பற்றி மேற்கொண்டு வரும் தேசிய மற்றும் சமய சேவைகளை கௌரவித்து மல்வத்தை பீடத்தினால் வழங்கப்படும் இவ்விருதானது மிகவும் சிறப்பு மிக்கதாகும். அரசு என்ற வகையில் பௌத்த சமய நடவடிக்கைளுக்கு முதலிடம் வழங்கப்பட்டு வருவதாகவும் அப்படியான ஒரு அரசின் ஒரு அங்கத்தவருக்கு இவ்வாறு சிறப்பு விருது வழங்கப்படுவது தமக்கு பெருமையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் சஜித் பிரேமதாசவின் நன்நடத்தை மற்றும் அவர் மேற்கொண்டு வரும் மக்கள் சேவை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இவ்வறான ஒரு விருதை வழங்க மல்வத்தை பீடம் முடிவு செய்துள்ளது. தனது தந்தை வழியில் சென்று பாரிய சேவையை அவர் ஆற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் சஜித் பிரேமதாசவின் தந்தையாரான காலம் சென்ற ரனசிங்க பிரேமதாச  கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு தங்க மூலாம் பூசப்பட்ட கூரைத் தகடுகளை பொருத்தியமை மாளிகாவில புத்தர் சிலையை புனரமைத்தமை போன்ற சமய சேவைகள் பெரிதும் பேசப்பட்ட  விடயங்களாகும். அதே போல் நவம் பெரிய பெரஹராவை ஆரம்பித்ததும் அவர் என்பது தனது நினைவுக்கு வருகிறது. . 

அதே போல் தனது தந்தையின் வழியில் சென்று வீடில்லதாவர்களுக்கு வீடமைத்துக் கொடுக்கும் உயர் பணியையும் சஜித் பிரேமதாச மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

‘சசுனட அருன’ (பௌத்த சமயத்திற்கு ஒளி) என்ற வேலைத்திட்டத்தின் ஊடாக பௌத்த சமயகல்வி வளர்ச்சிக்கு பாரிய சேவைகளைப் புரிந்து வருகிறார். கொழும்பு போன்ற வளமான ஒரு மாவட்டத்தில் அரசியல் செய்யப் போதிய அவகாசம் இருந்தும் கூட சஜித் பிரேமதாச  மிகவும் பின்தங்கிய அம்பாந்தோட்டை மாவட்டத்திற்குச் சென்று நலிவுற்ற மக்களுக்கு சேவைபுரிந்து வருவதை நான் பாராட்டாமல் இருக்க முடியாது.

இலங்கையில் பௌத்தம் (சம்புது சாசனம்) அருகி துறவிகள் இல்லாமற் போன வேளையில் சியம் நாட்டில் இருந்து துறவிகளை அழைத்து வந்து இலங்கையில் துரவரத்திற்கு வித்திட்ட புன்னிய பூமியான இந்த இடத்தில் அவ்வாறான ஒரு கௌரவ விருது கிடைப்பது பாராட்டத்தக்கது. முக்கியமான நிகழ்வாகும் என்றார்.

No comments

Powered by Blogger.