March 04, 2019

இந்தியாவில் தடம்புரண்ட, இஸ்ரேலிய அடிச்சுவடுகள்

21 நவம்பர் 2018. சிக்காகோ நகரத்தின் ஒதுக்குப்புரம் உள்ள யூத சினகோகு  ஆலயத்தில் 400 யூதர்களும் இந்துக்களும் கூடி விளக்கு  பண்டிகையை  பகிர்ந்து கொள்ளுகிறார்கள் . யூதர்களின் ஹனுக்கா பண்டிகை இந்துக்களின் தீபாவளி இரண்டுமே விளக்குகளோடு சம்பந்தப்பட்டிருப்பதால் இரு தரப்பினரும் அன்றைய தினத்தை ஆடலுடனும் பாடலுடனும் கழிக்கிறார்கள்.

இந்த விழாவில் தூதுவர்கள் பலர் உட்பட முக்கிய பல புள்ளிகள் கலந்து கொள்ளுகின்றனர் .

"இந்தியாவுடன்  27 வருட இராஜ தந்திர உறவுகளை இஸ்ரேல் பேணிவருவதை நினைவு படுத்த விரும்புகிற நான்,  பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தது முதல் இஸ்ரேலுடனான உறவு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் " அந்த நிகழ்வில் கலந்து கொண்ட இஸ்ரேலின் கவுன்சிலர் ஜெனரல் அவிவ் இஸ்ரா பேசிய வார்த்தைகள் அவை .


"நீங்கள் புரட்சிகர தலைவர் .நீங்கள் இந்தியாவை  புரட்சிகரமாக்கிக்கொண்டு இருக்கிறீர்கள் .சிறந்த ஓரு நாட்டை நாளையை எதிர்கொள்ள கூடிய விதமாக மாற்றிக்கொண்டு இருக்கிறீர்கள் "அப்படி பேசியது வேறு யாருமல்ல சமீபத்தில்
இஸ்ரேலிய பிரதமரை வரவேற்று பேசிய நரேந்திர மோடி .

யூத -ஹிந்து உறவு இன்று நேற்று தோன்றியதல்ல ,  தங்கக்காளை மாட்டை உருவாக்கி  ,அதை வணங்கிய ஸாமிரி
 , மூஸா நபியால் விரட்டப்பட்ட போது அவன் எங்கு சென்றான் என்கிற கேள்விக்கு  இந்துக்களின் காளை மாட்டு வழிபாடு தெளிவாக விடையளிக்கும்.

எதிரியின் எதிரி நண்பன் என்பதை இஸ்ரேல் பல புறங்களில் நிரூபித்து வந்துள்ளது. பர்மீய இராணுவத்துக்கு  இராணுவ தளபாட உதவி , பிலிப்பைன் இராணுவத்துக்கான உதவிகள் , பீ ஜே பீ தலைமயிலான இந்திய அரசுடனான நெருங்கிய உறவு ,இராணுவ ஒத்துழைப்பு, பொருளாதார உறவு ,ஆலோசனை வழங்குதல் என தொடருகிறது அதன் பட்டியல் .


இவ்வருடம் ஜனவரி மாதம் 25 ஆம் திகதி இஸ்ரேலிய பராக் 8 என்கிற கடல் பாதுகாப்பு ஏவுகணை எதிர்ப்பு  உபகரணத்தை இந்திய இராணுவம் பரிசோதித்த்து .இந்த ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணை இஸ்ரேலினாலும் இந்தியாவினால் இணைந்து அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தது .2018 ஆம் ஆண்டில் இஸ்ரேலிய ஏரோ ஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 777 மில்லியன் டாலர் பெறுமதியான ஏவுகணை உபகரண  உடன்படிக்கையை இந்தியாவுடன் கைச்சாத்திட்டது.

இராணுவ ,பொருளாதார ,விவசாய , தொழிநுட்ப ,உல்லாசப்பயண துறைகளில் இந்தியாவும் இஸ்ரேலும் நெருங்கிய நண்பர்களாக செயற்பட்டு வருகின்றமையை அண்மைக்காலமாக காணக்கூடியதாக உள்ளது.

சமீபத்திலே இந்திய  படைகள் 42 பேர்  கொல்லப்பட்டதிலும் அதன்பின்னர் இந்திய விமானங்கள் எல்லை கடந்து பாகிஸ்தானிய நிர்வாகம் கொண்ட அஸாத் காஷ்மீருக்குள் "பயங்கரவாதிகள்" மீது தாக்குதல் நடத்தியதிலும் ,தமது நாட்டை பாதுகாக்கிற எல்லா உரிமையும் தமக்கு இருப்பதாக கூறியதிலும்  வழமையான சந்தேக நபர் இஸ்ரேல் பின்னணியில் இருந்தமை சர்வதேச வட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்ட உண்மை .

தேர்தல் வருகின்ற போதெல்லம் ஓன்று காஸா யுத்தத்தை அல்லது லெபனான் யுத்தத்தை ஆரம்பித்து தம்மை ஹீரோவாக அடையாளப்படுத்தி தேர்தலில் வெற்றி பெறுவது இஸ்ரேலிய அரசியல் வாதிகளில் அதிலும் நெட்டன்யாஹுவின் வழியாக இருந்து வந்துள்ளது.அந்த அடிப்படையில சரிந்தது போயுள்ள  மோடியின் செல்வாக்கை தேசிய வாத,மதவாத  அடையாளப்படுதலுடன் வெற்றிபெற வைக்க தனது வழமையான பாணியை தனது நண்பனான மோடிக்கு நெட்டன்யாஹு பரிந்துரை செய்திருக்கக்கூடும் .

பாகிஸ்தானிய காஷ்மீரில் உள்ள ஜெய்ஷீ முஹம்மது போராளிகளை இலக்கு வைத்து விமானத்தில் இருந்து ஏவப்பட்ட ஸ்மார்ட் குண்டு இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ரபயேல் ஸ்பைஸ் -2000 குண்டுகள் என இந்திய ஊடகங்கள் பெருமை பாடின.

இங்கிலாந்தை மையமாக கொண்ட இன்டிபெண்டண்ட் பத்திரிகையின் பிரபல எழுத்தாளர் ராபர்ட் பிஸ்க் சுட்டிக்காட்டியது போல இந்தியா இஸ்ரேலின் மிகபெரிய ஆயுத வாடிக்கையாளர் .2017 இல் மாத்திரம் ராடார் ,குண்டுகள் ,வானில் இருந்து தரைக்கு ஏவும் ஏவுகணைகள் என  530 மில்லியண் டொலர்களை இந்தியா இஸ்ரேலுக்கு செலுத்தியது .அதேபோல கடந்த வருடம் இஸ்ரேலில் உள்ள நேவாடிம்  பலமாச்சிம் ஆகிய விமான தளங்களில் 16 இந்திய கருடா கொமாண்டோக்கள் உட்பட 45 பேர் குறிப்பிட்ட சில காலம் தங்கி இருந்தனர். 

இந்தியா உலகில் உள்ள மூன்றாவது மிகபெரிய முஸ்லீமகளின் சனத்தொகை கொண்ட நாடு என்பதும் ,  உலகிலேயே  அணுகுண்டுகளை  தன்னகத்தே கொண்ட ஒரேயொரு முஸ்லீம் நாட்டை எதிரியாக கொண்ட நாடு  என்பதும் , முஸ்லிம்களுக்கு விரோதமான போக்கு கொண்ட பி ஜே பியை ஆட்சியில் வைத்துள்ள நாடு என்பதும்
இஸ்ரேலிய தலையீட்டுக்கு முக்கிய காரணங்களாக அமைகிறது.

பாகிஸ்தானிடம் உள்ள ஆயுதங்களை பரிசோதிக்க ஒரு சந்தர்ப்பமாக எண்ணிய இஸ்ரேலுக்கு பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான்  வழமையான பிரதமர்களை போல அல்லாமல் பொறுப்புடன் அமைதியாக நடந்து கொண்டமை ஏமாற்றத்தை அளித்திருக்கும் .யுத்தம் ஒன்றை நடத்தி எதிர் வருகின்ற தேர்தலில்  குளிர் காய நினைத்த மோடிக்கும் இது பலத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

கைது செய்யப்பட்ட இந்திய விமானி கூட  இவ்வளவு விரைவில் சமாதன முறையில் ,நிபந்தனைகள் இன்றி விடுவிக்கப்படுவார் என இந்தியாவோ இஸ்ரேலோ எதிர்பார்த்திருக்காது ..

ஆக மொத்தத்தில் ,போட்ட கணக்குகள் அனைத்தும் தப்புக்கணக்குகள் ஆகிவிட்டதால் மோடியும் அவரது அட்வைசர் இஸ்ரேலும்  கடும் அதிருப்தியில் உள்ளனர் .

 இந்திய தேர்தல் ஆரம்பமாவதற்கு முன்னர் தேர்தலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்த இன்னொரு சதித்திட்டம் ஒன்றை விரைவிலே இந்தியாவிலே எதிர்பார்க்க முடியும் .அது இந்திய நகரங்களை மைப்படுத்திய பாரிய குண்டு வெடிப்பாகவோ அல்லது மக்களின் அனுதாபத்தை தூண்டுவதாகவோ  
இருக்கலாம். இஸ்ரேலின் அடிச்சுவட்டை  பின்பற்றியதாக அது அமையலாம்.

-முஹம்மது ராஜி-

2 கருத்துரைகள்:

Well Said Brother...

BUT Allah will plot more powerfully against to these alliance of SAYATHEENS.

Israel is the only country in the world, that never ever bow down to Islamic terrorism.

Post a comment