Header Ads



பள்ளிவாசலுக்குள் இரத்தம் குடித்தவனை, பாசமாக அழைத்த முஸ்­லிம் நபர்: உருகும் பொதுமக்கள்


நியூசிலாந்தில் நடைபெற்ற கொடூரமான துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு நடுவே, பாதிக்கப்பட்ட நபர் குற்றவாளியை பாசமான வார்த்தையை கூறி வரவேற்றதாக இணையதளவாசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

நியூசிலாந்தில் மதிய தொழுகை நேரத்தில் நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கி சூடு சம்பவத்தில் 49 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக பலியானதோடு, 40க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலக நாடுகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக பல நாட்டு தலைவர்களும், பிரபலங்களும் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக, 28 வயது பிரெண்டன் உட்பட 3 ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், துப்பாக்கிசூட்டின் போது பாதிக்கப்பட்ட ஒரு நபர் குற்றவாளியை பாசமாக "ஹலோ சகோதரர்" என பாசத்துடன் வரவேற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

துப்பாக்கி சூடு நடைபெறும் போது பேஸ்புக்கில் நேரலையாக வெளியான வீடியோ காட்சி ஒன்றில், இந்த காட்சி இடம் பெற்றிருந்ததாகவும் இணையதளவாசிகள் தெரிவிக்கின்றனர்.

கடைசி நேரத்தில் அவர் கூறியது நம்ப முடியாத ஒரு வார்த்தை என வேதனை தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூட்டை நிறுத்துவதற்காகவே இஸ்லாம் தயவை காட்ட முயற்சித்திருக்கலாம் எனவும், அந்த நபர் ஒரு ஹீரோ எனவும் புகழாரம் சூட்டுகின்றனர்.

No comments

Powered by Blogger.