Header Ads



முஸ்லிம்கள் குரூரமானவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள், முஸ்லிம்கள் அப்படியானவர்களா...?


(சத்துர - அம்ஹர் மௌலவியின் நேர்காணல்)

முஸ்லிம்கள் மாட்டை மற்றும் ஏனைய உயிரினங்களை கொன்று சாப்பிடுகிறார்கள்... இதனால் அவர்கள் குரூரமானவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். முஸ்லிம்கள் அப்படியானவர்களா?

உயிர்கள் என்று வரும் போது மாடும் மற்றவையும் உயிர்களாக இருப்பது போல இலை குழைகளுக்கும் உயிர் இருக்கிறது.

மாட்டைக்கொல்வது பாவம் என்றால் காட்டு யானையை கொல்வதும் பாவம்தானே?

விவசாயப்பயிர்களை நாசம் செய்வதாக அண்மையில் கூட அரச அனுமதியுடன் ஒரு யானையை சுட்டுக்கொன்றார்கள்.

இப்படி ஏராளமான யானைகள் இங்கே கொல்லப்படுகின்றன.

மனிதன் உண்ணப்போகும் உணவுப்பயிர்களை பாதுகாக்க அவற்றை நாசம் பண்ணாமல் இருக்க காட்டு யானைகளை கொல்ல முடியுமென்றால்...

உணவுப்பயிர்களில் வரும் கிருமிகளை மருந்தடித்து கொல்ல முடியுமென்றால்.....

உணவுக்காக மாட்டை ஏன் கொல்ல முடியாது?

அவ்வாறு உணவுக்காக ஜீவராசிகளை கொல்லக்கூடாதென்று நீங்கள் உறுதியான ஒரு தீர்மானத்தை எடுத்தால்....

நான் வீதிக்கு இறங்குவேன்.

நானே மாட்டு இறைச்சிக்கடைகளை வீதிக்கு இறங்கி மூடுகிறேன்.

காட்டு யானைகளை கொல்வதை, உணவுக்காக கோழிகளை கொல்வதை ஏனைய மிருகங்களை கொல்வதை நிறுத்தப்போவதாக ஒரு பொது அறிவித்தல் வரட்டும், நானும் அதனை அமுல் படுத்த வருகிறேன். எந்தப்பிரச்சினையும் இல்லை.

மாடு உயிர் என்றால் கடலில் உள்ள மீன் உயிரில்லையா? கோழி உயிரில்லையா?
தீர்மானமெடுங்கள்.

ஆம் நீங்கள் தெளிவாகச்சொல்கிறீர்கள்.

சதுர மஹத்மயா நாம் நிதானமாக புத்தியை பாவித்து இந்த விடயங்களை சிந்திக்கவேண்டும்.

Mujeeb Ibrahim

No comments

Powered by Blogger.