March 05, 2019

முஸ்லிம் சமூ­கத்­துக்கு அர­சா­ங்­கம் உரிய, பாது­காப்பு வழங்­க­வில்லை என்­பது நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ள­து

நாட்டில் வாழும் அனைத்து இனத்­த­வர்­க­ளுக்கும் பாது­காப்பு வழங்­கு­வது அர­சாங்­கத்தின் பொறுப்­பாகும். ஆனால் கடந்த காலங்­களில் முஸ்லிம் சமூ­கத்­துக்கு அர­சா­ங்­கம் உரிய பாது­காப்பு வழங்­க­வில்லை என்­பது நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ள­து.

அளுத்­கம, பேரு­வ­ளை, கிந்­தோட்டை, அம்­பாறை, திகன, கண்டி உட்­பட பல சம்­ப­வங்­களை இதற்கு உதா­ர­ண­மாகக் குறிப்­பி­ட­லாம். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்ற வன்செயல்­க­ளினால் பாதிக்­கப்பட்ட சொத்­து­க­ளுக்கும், பள்­ளி­வா­சல்­ க­ளுக்கும் நஷ்ட ஈடுகள் வழங்­கப்­ப­டு­வதில் நீண்டகால தாம­தத்­தையே எமது மக்கள் எதிர்­கொண்­டனர். சில இடங்­களில் உரிய நஷ்ட ஈடுகள் கூட வழங்­க­ப்ப­டவில்லை.

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திகன, கண்டியில் இடம்­பெற்ற வன்­செயல்களினால் பாதிக்­கப்­பட்ட சொத்­து­க­ளுக்கு பகு­தி­ய­ளவில் நஷ்ட ஈடுகள் வழங்­கப்­பட்­டு­விட்­டன. முழு­மை­யான நஷ்ட ஈடுகளை வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் தற்­போது பூர்­த்தி செய்­யப்­ பட்­டுள்­ளன.

ஆனால் 2018 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 26 ஆம் திகதி இன­வா­தி­­களால் தாக்கி சிதைக்கப்பட்ட அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வாசல் மற்றும் 13 சொத்­து­க­ளுக்கு இது­வரை நஷ்டஈடுகள் வழங்­கப்­ப­ட­வில்லை. இவற்­றுக்­கான நஷ்ட ஈடு­களைப் பெற்­றுக் கொடுப்­ப­தற்கு முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் முயற்­சி­களை மேற்­கொள்ள வேண்டும் என நாம் அவர்­களை வலி­யு­றுத்த விரு­ம்­பு­கிறோம்.

பாதிக்­கப்­பட்ட சொத்­து­க­ளுக்கு மதிப்­பீ­டு செய்யப்­பட்ட தொகையே நஷ்டஈடாக வழங்­கப்­பட வேண்டுமே தவிர அமைச்­சர்கள் தன்­னி­ச்­சை­யாக அத்­தொ­கையில் எத்­த­கைய மாற்­றங்­க­ளை­யும் செய்­யக்­கூ­டாது என்­பதே எமது நிலைப்­பா­டாகும்.

வன்செயல்­களால் பாதிக்­கப்­பட்ட அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வா­சலின் இழப்­புகளுக்கான நஷ்­ட­ஈடு 4½ கோடி ரூபா­வென அப்­போ­தி­ருந்த பள்­ளி­வாசல் நிர்­வாகம் அம்­பாறை மாவட்ட செய­ல­கத்­துக்கு விரி­வான அறி­க்­கை­யொன்­றினைச் சமர்ப்­பித்­தி­ருந்­தது.

இந்­நி­லையில் அரச அதி­கா­ரி­களும், மதிப்­பீட்டு திணைக்­க­ளமும் மேற்­கொண்ட ஆய்­வு­க­ளை­ய­டுத்து அம்­பாறை பள்­ளி­வா­ச­லுக்­கான நஷ்­ட­ஈடு 27 மில்­லியன் ரூபா என நிர்­ண­யிக்­கப்­பட்டு அதற்­கான கோவைகள் புனர்­வாழ்வு அதி­காரசபைக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டது. ஆனால் அம்­பாறை பள்­ளி­வா­ச­லுக்கு 27 மில்­லியன் ரூபா நஷ்டஈடாக வழங்க முடி­யாது என அமைச்­ச­ரவை நிரா­க­ரித்­துள்­ள­து.

புனர்­வாழ்வு அதி­கார சபையின் சுற்றுநிரு­பத்­துக்கு அமை­வாக மதஸ்­தலம் ஒன்­றுக்­கான ஆகக்­கூ­டிய நஷ்ட ஈடாக 1 மில்­லியன் ரூபாவே வழங்க முடியும் என்­ப­தற்கு அமை­வா­கவே அத்­தொகை அங்­கீ­க­ரி­க்­கப்­பட்­டுள்­ளது. அம்­பாறை பள்­ளி­வா­ச­லுக்கு மதிப்­பீடு செய்­யப்­பட்­டுள்ள நஷ்டஈட்டுத் தொகை­யாக 27 மில்­லியன் ரூபா வழங்­கப்­பட வேண்டும் என பள்­ளி­வாசல் நிர்­வா­கமும், சிவில் சமூக அமைப்­பு­களும் கோரிக்கை விடுத்­துள்­ளன. அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதி­யுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் அம்­பாறை பள்­ளி­வாசல் விவ­கா­ரத்தில் துரி­த­மாக செயற்­பட வேண்டும். அரச அதி­கா­ரிகள், அரச நிறு­வ­னங்கள் மதிப்­பீடு செய்­துள்ள 27 மில்­லியன் ரூபா நஷ்ட ஈட்­டினைப் பெற்றுக்கொடுப்­ப­தற்கு அர­சாங்­கத்­துக்கு அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்க வேண்டும் என்­பதே எமது கோரிக்­கையுமாகும்.

இதே­போன்று அம்­பா­றையில் பாதி­க்­கப்­பட்ட ஹோட்­டல்­க­ளுக்கும் மதிப்­பீடு செய்­யப்­பட்ட நஷ்டஈட்­டினை விடவும் குறை­வா­கவே இழப்­பீடு வழங்­கப்­ப­ட ­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அம்­பாறை வன்­செ­யல்­களின் போது மோச­மாகப் பாதிக்­கப்பட்ட காசிம் ஹோட்­டலின் சேதங்­கள் 22 இலட்சம் ரூபா என மதிப்­பீடு செய்­யப்­பட்­டாலும் 2 இலட்சம் ரூபாவே நஷ்டஈடாக வழங்கமுடியும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்கு முழு­மை­யான நஷ்டஈடு வழங்­கப்­படும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஏற்­க­னவே உறு­தி­­ய­ளித்­தி­ருந்தார். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்கவே தற்­போது புனர்­வாழ்வு அதி­கார சபைக்கும் பொறுப்­பான அமைச்­ச­ராக இருக்­கிறார். எனவே பிர­தமர் பள்­ளி­வாசல் உட்­பட வன்­செ­யலில் பாதிக்­கப்­பட்ட அனைத்து சொத்­துக­ளுக்­கும் உரிய நஷ்ட ஈட்­டினை தாம­த­மின்றி பெற்­றுக்கொடுக்க வேண்­டு­மென நாமும் கோரு­கிறோம்.
-Vidivelli

0 கருத்துரைகள்:

Post a comment