Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம், பிரதிநிதிகளுடன் அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு - மகஜரும் கையளிப்பு


இலங்கை்க்கான அமெரிக்காவின்        அலெய்னா பி டெப்னிட்ஸ் அவர்களுடனான சந்திப்புபொன்று யாழ் ஒஸ்மானியாக்கல்லூரியில் இன்று -07- இடம் பெற்றது.

இதன்போது பலவநதமாக ஆயுதமுனையில் வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லீம்களின் யதார்த்த 1990 ஆம் ஆண்டின் நிலைமைகளையும், இன்றைய சமகாலநிலையும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும்  தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டது.

இதன்போது புத்தள வாழ் யாழ் கிளிநொச்சி வெளியேற்றப்பட்ட சிவில் சம்மேளனம் சார்பாக செயலாளர் ஹஸன் பைறூஸ் வெளிக்கள இணைப்பாளர் பதுருதீன் நிலாமும் முல்லைத்தீவு மாவட்டம் சார்பாக ரா.முஹம்மது குவைஸ் யாழ்மாவட்டம் சார்பாக  அஷ்ஷேக் சுபியான் மௌலவியின் பிரதிநிதியாக கே.சுரைஸ் கிளிநொச்சிமாவட்டபிரதி நிதியாக க.முஹம்மது கபீர் பூநகரி பிரதேச உறுப்பினரும் பிரசன்னமாக இருந்து தங்களது வருகையை பிரதிநதிப்படுத்தி கருத்துககளை தெரிவித்திருந்தார்கள்.

மேலும் யூ என் ஓ வினால் முன்வைக்கப்பட்ட நிலைமாற்றலு்கான நீதி ,உண்மை , மீள்நிகழாமை, இழப்பீடுகள் போன்றவற்றை மையப்படுத்தி எமது நிலைமைகளின வகிபாகத்தையும கொண்ட ஆவணத்தையும், மீள்குடியேற்றத்தின் தடைகளையம் அதனை நிவர்த்திக்க ஏதுவான சமாந்தர கட்டமைப்பு நியைில் ஒருபகுதி மீள்குடியேற்ற தேவையை நிவர்த்தி்க்க்கோரி அமெரிக்க தூதுவரிடம்  ஆவணப்படுத்தலுடன் மனுக்கள் கையளக்கப்பட்டது.

புத்தள வாழ்  யாழ் கிளிநொச்சி வெளியேற்றப்படடசிவில் சம்மேளம்.



1 comment:

  1. “இலங்கை முஸ்லிம்கள் அமேரிக்கவிடம் சரணாகதி” என தலைபிட்டிருக்க வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.