Header Ads



எருமை மீது ஏறி, பாடசாலை செல்லும் மாணவர்கள் - இலங்கையில் துயரம் (காணொளி)

சுமார் 3 கிலோ மீற்றர் தூரம் எருமை மீது ஏறி பாடசாலை வரும் மாணவர்கள் குறித்த செய்தியொன்று நெலும் மெதகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

அவர்கள் எருமை மீது ஏறி நாளாந்தம் இவ்வாறு பாடசாலை வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் மூன்று கிலோ மீற்றர் தூரம் இவர்கள்  எருமை மீது பயணம் செய்தாலும் , எருமை அதனை தனது கடமையாகவே செய்வதாக தெரிவிக்கப்படுகிறது

மேலும் , மாணவர்களை மிகவும் பாதுகாப்பாக மீண்டும் வீட்டுக்கு குறித்த எருமை அழைத்துச் செல்வதாக அதன் உரிமையாளர் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் , மாணவர்களை அவரின் தந்தை உந்துருளியில் பாடசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

எவ்வாறாயினும் , சில மாதங்களுக்கு முன்னர் உந்துருளி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதனை தொடர்ந்து ஒருநாள் மாணவர்கள் எருமை மீது ஏறி பாடசாலை சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அன்றைய தினம் தொடக்கம் இன்று வரை மாணவர்களை பாடசாலைக்கு அழைத்து வர காலையிலேயே எருமை தயாராகி விடுவதாக அதன் உரிமையாளர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.




1 comment:

  1. .. Painful to hear about this families situation...

    ReplyDelete

Powered by Blogger.