Header Ads



பள்ளிவாசலுக்குள் மகனையும், கணவரையும் இழந்த தாயின் வேதனை


நியூசிலாந்து மசூதியில் நடந்து துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது, மகன் என்னிடம் பேசிக் கொண்டு இருந்தான், அதன் பின் என்ன நடந்தது என்பதை தாய் ஒருவர் மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார்.

நியூசிலாந்தின் Christchurch-ல் இருக்கும் இரண்டு மசூதிகளில் குடியேற்றத்துக்கு எதிரான தீவிர வலதுசாரி கொள்கையை அடிப்படையாக கொண்ட Brenton Harris Tarrant என்ற நபர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 50 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து Salwa Mustafa என்பவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் துப்பாக்கிச் சூடு நடைபெறுவதற்கு முன்னர், என்னுடைய மூத்த மகன் Hamza(16) போனில் பேசிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென்று அவன் அம்மா யாரோ மசூதிக்குள் நுழைந்து துப்பாக்கியால் சுடுகின்றார் என்று தன்னுடைய சகோதரன் Zaid(13) அழைத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிப்பதற்காக ஓடினான்.

அதன் பின் சுமார் 22 நிமிடம் போனில் எந்த ஒரு பேச்சும் இல்லை, அமைதியாக இருந்தது. போன் ஆன்லையே இருந்தது தவிர என் மகன் பேசவில்லை, அதன் பின் யாரோ ஒருவர் போனை எடுத்து, உங்கள் மகன் மூச்சு விடவில்லை, அவர் இறந்துவிட்டார் என்று கருதுகிறேன் என்று கூறினார்.

ஆனால் மற்றொரு மகன் Zaid எப்படியோ சிறிய அளவிலான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அவரின் கணவர் Khaled-ம் இறந்துவிட்டார்.
இதனால் இரண்டு உயிர்களை பறிகொடுத்த அவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அவனை கடவுள் சும்மா விடமாட்டார், நிச்சயமாக தண்டிப்பார் என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.