Header Ads



ரணிலுக்கு எதிராக விசாரணை..?

  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்குமாறு, கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மனுவொன்று ​அனுப்பட்டுள்ளது.

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் உறுப்பினர் ஒருவர் இந்த முறைபாட்டினை முன்வைத்துள்ளதாக ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முறிகள் மோசடியுடன், பிரதமருக்கும் தொடர்பிருப்பதாக தற்போது தகவல் வௌியாகியுள்ள நிலையில், அது குறித்து பிரதமரிடம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,.

இதற்கு தேவையான அனைத்து தரவுகளையும் வழங்குவதற்கு தயாராகவுள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் உறுப்பினர் குறிபிட்டார்,.

இந்த மனுவை, ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன உள்ளிட்ட குழுவினருக்கு அடுத்த வாரமளவில் கையளிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இதன்பின்னரே முறைபாடு குறித்து விசாரணை செய்வதா இல்லையா என்ற தீர்மானம் எட்டப்படும் எனவும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார் NF

1 comment:

  1. Investigation has to be done against this sucking mouth on the percentage he got out of US $ 18 billion from Mahinda, percentage he got out of Mig Deals from Gota, percentage he got out of Kris Apartment deal from Namal, percentage he got out of 30% on every projects robbed by Basil.

    This sucking mouth is a black sheep from Wijewardana family.

    ReplyDelete

Powered by Blogger.