Header Ads



பௌத்த பீடங்கள் சபாநாயகருக்கு வழங்கிய விருது - தூய்மையாகவே வெளியேறுவேன் என்கிறார்


1956 ஆம் ஆண்டு ஏற்பட்ட சமூகப் புரட்சிக்கு அக்கால ஆணைக்குழு அறிக்கைகள் ஒரு காரணமாக இருந்தன. அத்துடன் எனது அரசியல் வாழ்விலும் அவை பங்களிப்புச் செலுத்தியதென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

மல்வத்து பீட மகாநாயக்கத் தேரர் மற்றும் உள்ளிட்ட மகாசங்க நாயக்கர்களினால் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு “சாசன கீர்த்தி ஸ்ரீ தேசாபிமானி” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கண்டி மல்வத்து மகாவிகாரையில் இவ்வைபவம் நடைபெற்றது.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

இன்று எனது வாழ்க்கையில் முக்கிய நாளாகக் கருதுகிறேன். 1994 இல் நான் அரசியலுக்குள் பிரவேசித்தேன். இலவசக் கல்வியை அனுபவித்த நான் நாட்டிற்கு சேவை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அன்று முதல் இன்று வரை மோதல்களின்றி, தூய அரசியலை செய்து வருகிறேன். இதுவே எனது கொள்கையாகும்.

எனது அரசியல் வாழ்வில் கட்டவுட், போஸ்டர் , பெனர், பொலித்தீன் அலங்காரம் போன்ற எதையும் பயன்படுத்தாது அரசியல் செய்து ஓர் உதாரண புருசராக இருந்துள்ளேன்.அந்த அடிப்படையில் எனக்கு ஆதரவு நல்கிய சகலருக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

தூய அரசியல் கரத்துடன் அரசியலுக்குள் பிரவேசித்த நான், வெளியேறும் போதும் அதே தூய்மையையே கடைப்பிடிப்பேன். நாட்டு மக்களுக்கு நீதி, நேர்மை, சட்டம்,ஒழுங்கு இவற்றை நிலை நிறுத்த எத்தகைய சவால்கள் வந்தாலும் ஏற்றுக்கொள்வேன். அதனூடாக ஜனநாயகத்தைப் பாதுகாப்பேன்.

சுயாதீன அரச நிர்வாகத்தில், பொலீஸ் மற்றும் நீதிமன்றம் போன்றவற்றைப் பாதுகாக்க முன்னிற்பேன். இளைஞர்களுக்கு நாட்டை ஒப்படைப்பதாயின் நாம் அதிகளவு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

இயற்கையின் அருட்கொடையாகிய தூய்மையான சுற்றாடலைப் பாதுகாப்பது எமது கடமை. அது முக்கியமான ஒன்றாகும்.

சுதந்திரத்தின் முன் பிறந்தவன் என்றவகையில் இந்த நாட்டில் உள்ள பண்பாடுகள், மனிதநேயம் என்பன நாம் பெற்றுக்கொண்ட ஜனநாயத் தன்மைகளாகும். அதனை புதிய தலைமுறையினருக்கு கொடுக்க வேண்டியுள்ளது. அதற்காக மதகுருமார் வழங்கிய ஆலோசனை, வழிகாட்டல்கள் முக்கியமானதாகும்.

இன்று மதகுருமார்களாகிய நீங்கள் எனக்கு வழங்கிய கௌரவத்தையும் நம்பிக்கையும் நான் தொடர்ந்து பாதுகாப்பேன். என்னால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தேசிய சமூக, சமய,கடமைகளை வெறுப்படையாது மேற்கொள்வேன் என்று கௌரவத்துடன் உறுதியளிக்கறேன்.

நாட்டில் பயங்கரவாதம் தலைவிரித்தாடிய காலத்தில் மதகுருமாராகிய உங்களது ஆலோசப்னைபடி ஆட்சியிலிருந்த அரசுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு பலம் கிடைத்தது.

அது அரசியல் ரீதியாக எனக்கு சிறப்பாக இல்லாவிட்டாலும் மனச்சாட்சிக்கு ஏற்ப நான் தொழிற்பட்டேன். அது கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டிய தேசிய தேவையாகும். எனது வாழ்வில் இறுதி நேரம் முதல் அது பற்றி சிந்தித்து உளரீதியாக திருப்தியடைய முடியும்.

எம்.ஏ.அமீனுல்லா, 

No comments

Powered by Blogger.