Header Ads



சிறுபான்மையினத்தவர் ஆதரவின்றியும் என்னால், வெல்ல முடியும் - கோத்தபாய

ஜனாதிபதி தேர்தலில் தன்னால் வெற்றிபெறமுடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சிறுபான்மையினத்தவர்களின் ஆதரவு இன்றியும் என்னால் வெல்ல முடியும் என குறிப்பிட்டுள்ளார்

இந்திய ஆங்கில ஊடகமொன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

நாடு கடந்த மூன்றுதசாப்த காலமாக சிக்கியுள்ள சேற்றிலிருந்து அதனை மீட்பதற்கு இனரீதியில் பக்கச்சார்பற்ற -சமூக பொருளாதார அபிவிருத்தியை நோக்கமாக கொண்ட -மையநீரோட்டத்துடன் சாரத தலைவர் ஒருவரிற்காக இலங்கை ஏங்குகின்றது என தான் நம்புவதாக கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்

நான் வெற்றிபெறுவேன் என நம்புவதற்கு இதுவே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

கோத்தபாய ராஜபக்ச தனது இனரீதியில் பக்கச்சார்பற்ற அபிவிருத்தியை நோக்கமாக கொண்ட நிகழ்சிநிரல் காரணமாக சிறுபான்மையினத்தவர்களின் வாக்குகளையும் தன்னால் பெறமுடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வாக்குகள் குறித்து மாத்திரம் சிந்திக்கும் அபிவிருத்தி குறித்து அக்கறை கொள்ளாத அரசியல்வாதிகள் குறித்து மக்கள் களைப்படைந்துவிட்டனர் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்

நான் ஒரு மையநீரோட்ட அரசியல்வாதியில்லை இதுவே எனக்குள்ள சாதகமான நிலை எனவும் அவர் தெரிவித்துள்ளார்

இதேவேளை நான் சிறுபான்மையினரின் வாக்குகளை பெறவேண்டும் என்பது அவசியமில்லை எனவும் குறிப்பிட்டுள்ள அவர்  2010 இல் தமிழ் மக்களின் ஆதரவு இல்லாமல் மகிந்த ராஜபக்ச 1.8 மில்லியன்   வாக்குகளை பெற்றார் என குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மையினத்தவர்களின் வாக்குகளை பெறாததால் அவர் 2015 இல் தோல்வியடையவில்லை மாறாக கம்பஹா,கொழும்பு போன்ற பகுதிகளை சேர்ந்த  நடுத்தர வர்க்க சிங்களவர்கள் அவரிற்கு வாக்களிக்காததன் காரணமாகவே அவர் தோல்வியடைந்தார் எனவும்  கோத்தபாயராஜபக்ச தெரிவித்துள்ளார்

மகிந்த ராஜபக்ச 449000 வாக்குகளாலேயே தோல்வியடைந்தார், தனக்கு சாதகமில்லாத நிலையிலும் அவர் வடக்கில் 100,000 வாக்குகளை பெற்றார் எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பிரஜரிமையை கைவிடுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கௌரவத்துடன்  வாழ்வதற்கான தமிழர்களின் வேண்டுகோள்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ச கௌரவம் என்பது அரசியல் அதிகாரத்தின் மூலம் மாத்திரம் கிடைப்பது என நான் கருதவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மக்களிற்கு உரிய கௌரவத்தை வழங்குவது என்பது அவர்களது வருமானத்தை உயர்த்தி வாழ்க்கை தரத்தை உயர்த்துவது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரங்களிற்கான தமிழர்களின் போராட்டத்திற்கு பொருளாதாரமே காரணம் தமிழ் அரசியல்வாதிகள் தெரிவிப்பது போன்று அரசியல் காரணங்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்

அதிகாரப்பகிர்வு பிரச்சினைகளிற்கு தீர்வை கொண்டுவருமா என தமிழ் அரசியல்வாதிகள் தங்களை தாங்களே கேட்டுக்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் கட்சிகள் பிழையான திசையில் பயணித்துக்கொண்டுள்ளன எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்

அவர்கள் ஆட்சியில் பங்குகொண்டு தங்களது மக்களை அபிவிருத்தி செய்யவிரும்பில்லை,அதிகாரத்திற்கு வெளியே எதிர்கட்சியாகவிருந்து அவர்கள் எதனை சாதித்துள்ளனர் வடமாகாணத்திற்கு பொறுப்பாக அவர்களை மக்கள் தெரிவு செய்தவேளை அவர்கள் எந்த அபிவிருத்தியையும் முன்னெடுக்கவில்லை அபிவிருத்திக்காக அனுப்பபட்ட நிதியை திருப்பினுப்பினர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இனஅடிப்படையிலான அரசியல் அரசியல் தீர்வையும் பொருளாதார அபிவிருத்தியையும் தாமதித்துள்ளது எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்

9 comments:

  1. இவனுக்கு ஒரு வாக்காவது கொடுக்காமல் தவிர்ந்து கொள்ள இந்த நாட்டில் வாழும் தமிழ் முஸ்லிம் வாக்காளர்களுக்கு அவர்களின் எதிர்காலம் கருதி நான் கேட்டுக் கொள்கின்றேன்.

    ReplyDelete
  2. "The Muslim Voice" extends its wellwishes to Former Defense Secretary Gotabaya Rajapaksa on his outspokeness. "The Muslim Voice" will extend all it's support to the Former Secretary to win the next presidential elections if MR will name him as the Candidate, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  3. Noor: When he says he doesn’t need your support, why the hell you wanna lick his a-se?

    ReplyDelete
  4. Even in this speech he speaks racism. how come he says he is nutral?

    ReplyDelete
  5. MUSLIM VOICE, IS AN AGENT OF MAHINDA FAMILY. HE IS LIKE A SPY FOR THEM. PLEASE BE CAREFUL WITH THIS MAN WHEN YOU SPEAK. WHITE VAN WILL HAUNT YOU SOON.

    ReplyDelete
  6. Shihabdeen (Saakbish).
    Gotabaya told the reality. 'THE MUSLIM VOICE' expressed our views. Gotabaya did not say he does not want the votes of the minorities.
    But your language shows that you are a character/person coming from the the lowest of human dignity and background/gutters and worst than a "paraya'.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  7. Noor: Gota told that he will treat Sri Lankan Muslims like Jews treat Palastine Arabs, if he become president.

    If you say that you will support Gota for presidency, your character shows that you come from the generation of Abu Jaheel, and you’re worster than PARAYA.

    I always use my professioncy of my language towards the suitability of characters, and your character shows that YOU ARE A DIRTY THIRD CLASS RASCAL, and you will give anything to MR for your political benefits.

    ReplyDelete
  8. Mr. Nizam you don't have any single write to say/Use "Muslim Voice".
    01. First of all Its not our communities Voice.
    02. Good Muslims Never support Racist, Extremist, Terrorist. Only use support them Name/Labeled Muslims Sufies.. And Hubboos. Not Real Muslims.
    03. Now we All came to know who you are and who's voice was it.
    Please Here after use as
    'Noor Nizam Voice"
    " PA Voice"
    " Rajapaksa Voice"
    Use anything/any name except our Community Name...
    "Shame on you if you use it again"


    ReplyDelete
  9. Dear Brother Shihabdeen (Saakbish) & TrueF (why not you sign with your true name and not hide behind a "pen name"?
    Please browse the website on internet news papers, political forums and TV channels and you will get the full story, Insha Allah. "The Muslim Voice" is Authoritative, Truthful, Honest and FEARLESS in the "COMMENTS/REBUTTALS it makes which is based on the best professional and deep political communication research undertaken on all Muslim Issues and the "Muslim Factor". The Muslim politicians and community leaders have been covertly undermining the Muslims and the MUSLIM FACTOR in Sri Lanka till TODATE for their personal and selfish benefits and gains.
    I am happy that "The Muslim Voice" has kindled the "POSITIVE" and "NEGATIVE" thoughts of some of the readers on our comment, Alhamdulillah. A bit of an advice to you. Do not look up and spit at others, it will fall on your own face. Your comment clearly indicates that you both are blind to the reality of the political and social issues of the “MUSLIM FACTOR”.

    This is what "The Muslim Voice" (Insha Allah) is challenging from the "POLITICAL WILDERNESS" in Sri Lanka because the Muslims have NO POLITICAL VOICE in Sri Lanka. We are a community being betrayed by it’s own political and community leaders. The Muslim community needs "CHANGE" and "NEW THINKING", Insha Allah.
    "ULATHA SONNAA UDAMBU MULUKA NOOKUM" The Tamil proverb seems TRUE according to your silly comments. I have alway maintained a high level of critical analytic comments as a Political Communication Researcher and I understand your mind-set now, but I am not going to try and prove in this "FORUM" that you are a " POLITICAL IDIOT", rather wish to englighten you of the realities. Lets accept the above and try to bring about a change in our favour, Insha Allah. By the way - let me tell you SAAKBISH, that I do not look foarward to any benefits political or otherwise from anyone,Insha Allah, but FULLY contended with what God AllMighty Allah has blessed upon me, Alhamdulillah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.