Header Ads



மஹிந்த தரப்பினால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட முடியாது - சு.க.யின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரியே

மஹிந்த தரப்பினால் பெயரிடப்படும் வேட்பாளரினால் தனித்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்றைய தினம் நடைபெற்ற கூட்டமொன்றில் பங்குபற்றி உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை போட்டியிடச் செய்ய வேண்டுமாயின் கட்சியை கட்டியெழுப்ப வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை தெரிவு செய்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கூறியதாக அறிந்தேன்.

எங்களுடன் இன்னமும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன, அந்தப் பேச்சுவார்த்தைகள் ஆரம்ப மட்டத்திலேயே உள்ளது. விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போது நான் ஜீ.எல்.பீரிஸூடன் சென்றிருக்கின்றேன்.

முதல் பேச்சுவார்த்தையிலேயே ஆயுதங்களை கீழே வையுங்கள் என்று சொல்ல முடியுமா, முதலில் மோதலை நிறுத்தவே பார்த்தோம்.

அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தும் போது இலங்கை அரசாங்கம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் சென்று வேண்டிய விளையாட்டுக்களை போட முடியுமா, இல்லை. அப்படித்தான் சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளும்.

அவர்களது (மஹிந்த தரப்பு) கூட்டங்களுக்கு நாம் செல்ல முடியமா முயாது, எங்களது கூட்டங்களுக்கு அவர்கள் வருவார்களா?

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் 65 லட்சம் வாக்குகளைப் பெற்றுக் கொள்பவரே வெற்றியீட்டுவார், பொதுஜன முன்னணியினால் தனித்து போட்டியிட்டு 65 லட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற ரீதியில் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.