Header Ads



அந்தோ பரிதாபம், நடந்தது உள்நாட்டு சொதப்பல், நடக்கப்போவது உலகளாவிய மண்கவ்வல்

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு - பொறுப்புக்கூரலை நிறைவேற்ற கால அவகாசம் வழங்க உத்தேசிக்கப்பட்டு பல நாடுகளின் ஆதரவுடன் இணை அனுசரணை யோசனையொன்றும் நிறைவேற்றப்படவுள்ளது..
மறுபுறம் இலங்கை அரசு இதற்கு ஆதரவை தெரிவித்துள்ளது..
அந்த இடைவெளிக்குள் 8 ஆம் திகதி நாடுகள் தொடர்பான மதிப்பீட்டை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கை வெளிவரவுள்ளது. அதில் இலங்கையை பற்றியும் குறிப்பிடுவார் ஆணையாளர்..
இந்த நிலையில் - ஜனாதிபதி தனது சார்பில் ஒரு குழுவை ஜெனீவா அனுப்புகிறார்..
இங்கு தான் சர்ச்சையே ஆரம்பிக்கிறது..
இந்தக் குழு ஜெனீவாவில் இராஜதந்திரிகளை சந்தித்து பேசி பெரிய சாதனை எதுவும் செய்துவிட முடியாது..
பல நாடுகள் அங்குள்ள தமது இராஜதந்திரிகள் ஊடாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் மட்டத்தில் தொடர்புகொண்டு ஏற்கனவே இணை அனுசரணை கொண்ட பிரேரணையை தயாரித்து முடிந்த நிலையில் ஜனாதிபதியின் இந்த முடிவு இராஜதந்திரிகளை பெரும் சங்கடத்திற்குள்ளாக்கப் போகிறது...
இலங்கைக்கு கால அவகாசம் தாருங்கள் என்று ரணில் சொல்வதற்கும் இல்லை எங்கள் பிரச்சினையை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்று மைத்ரி சொல்வதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது..
அதனால் - இதுவரை இலங்கையில் மட்டும் வியாபித்திருந்த உள்நாட்டு அரசியல் சண்டை உலகத்திற்கே தெரியப்போகிறது..
ஜனாதிபதியின் சார்பில் ஜெனீவாவுக்கு செல்லும் குழு அங்கு அதைப் பேசினோம் இதைப்பேசினோம் என்று கூறினால் அது சிலவேளை உள்நாட்டு அரசியலுக்கு கைகொடுக்கலாம்..
ஆனால் இரண்டு தலைவர்கள் சேர்ந்து ஒற்றுமையாக நடத்த முடியாத ஒரு ஆட்சியில் மக்களின் நிலைமை எப்படி இருக்கும் என்பதனை ஐ நா மனித உரிமைகள் ஆணைக்குழுவும் மேற்குலகமும் புரிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையப் போகிறதே...
அந்தோ பரிதாபம்..!
நடந்தது உள்நாட்டு சொதப்பல்..
நடக்கப்போவது உலகளாவிய மண்கவ்வல்..!

-Siva-

2 comments:

  1. மைத்திரி என்ன உலக நடப்புகள் அறியாமல் இருக்கினாரு.

    ஆனால், தான் ஒரு கோமாளி என “மகிந்த PM நியமனம்”, “கிழக்கு கவர்னர் நியமனம்” போன்ற பலவற்றில் ஏற்கனவே நிரூபித்துவிட்டார், எனவே உலக நாடுகள் இவரை கணக்கில் எடுக்க மாட்டார்கள்


    ReplyDelete
  2. எங்களுடைய பிரச்சினையை நாங்களே தான் பார்த்துக்கொள்ள வேண்டும். தீவிரவாத அட்டூழியங்கள் இங்கு தானே நடந்தது? அன்று எந்தவொரு நாடும் மூச்சுவிடவில்லை. இன்று தீவிரவாதம் முழுதாக புதைக்கப்பட்டு தமிழர்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாக காட்டிலிருந்து வெளியில் வந்துகொண்டிருக்க சர்வதேசத்தின் தலையீடு தேவையற்றது.

    ReplyDelete

Powered by Blogger.