Header Ads



"செய்­யாத குற்­றத்­திற்­கா­கவே, ஞான­சாரர் சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருக்­கின்றார்"

ஞான­சாரர் செய்­யாத குற்­றத்­திற்­கா­கவே சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருக்­கின்றார் என்­பதை மக்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்தும் நோக்­கி­லேயே இந்த துண்­டுப்­பி­ர­சுரம் விநி­யோ­கிக்கும் செயற்­பாட்டை முன்­னெ­டுத்­தி­ருக்­கின்றோம். கொலைக்­குற்றம் இழைத்தோ, ஊழல் மோச­டி­களில் ஈடு­பட்டோ ஞான­சாரர் சிறை செல்­ல­வில்லை. மாறாக 30 வரு­ட­கால யுத்­தத்தை முடி­விற்கு கொண்டு வரு­வ­தற்கு தம்மை அர்ப்­ப­ணித்து செயற்­பட்ட புல­னாய்வு அதி­கா­ரி­களை சிறை­யி­ல­டைப்­ப­தற்கு எதி­ரா­கவே அவர் குரல் கொடுத்தார். எனவே நாட்டு மக்கள் அனை­வரும் ஞான­சார தேரரை மீட்கும் நட­வ­டிக்­கைக்கு பங்­க­ளிப்பு வழங்க வேண்டும் என ‘சிங்­களே அபி” அமைப்பின் தலைவர் ஜம்­பு­ரே­வெல சந்­த­ரத்ன தேரர் தெரி­வித்தார்.

பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் நியா­மற்ற வகை­யி­லேயே சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருக்­கின்றார் என்ற விழிப்­பு­ணர்வை மக்கள் மத்­தியில் ஏற்­ப­டுத்­து­வதை நோக்­காகக் கொண்டு நாட­ளா­விய ரீதியில் 50 இலட்சம் துண்­டுப்­பி­ர­சு­ரங்­களை விநி­யோ­கிக்கும் செயற்­பாட்டை பொது­ப­ல­சேனா அமைப்பு நேற்­றைய தினம் கொழும்பு கோட்டை புகை­யி­ரத நிலை­யத்தின் முன்­பாக ஆரம்­பித்­தி­ருந்­தது.

ஞான­சாரர் செய்­யாத குற்­றத்­திற்­கா­கவே சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருக்­கின்றார் என்­பதை மக்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்தும் நோக்­கி­லேயே இந்த துண்­டுப்­பி­ர­சுரம் விநி­யோ­கிக்கும் செயற்­பாட்டை முன்­னெ­டுத்­தி­ருக்­கின்றோம். குறித்­த­வொரு வழக்கு தொடர்பில் நீதி­மன்றம் வழங்கும் தீர்ப்பு ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தது எனும் பட்­சத்தில் அது குறித்து முறைப்­பாடு செய்யும் உரிமை அனைத்துப் பிர­ஜை­க­ளுக்கும் உண்டு. ஆனால் அதனை உரி­ய­வர்­க­ளி­டத்தில் முறைப்­பாடு செய்ய முடி­யா­மையின் கார­ண­மா­கவே மக்­க­ளி­டத்தில் இதனை தெளி­வு­ப­டுத்­து­கின்றோம்.

தற்­போது சட்­டமா அதிபர் திணைக்­களம் அர­சி­யல்­வா­தி­களின் தேவை­க­ளுக்கு அமை­வாக செயற்­பட்டு வரு­கின்­ற­தொரு நிலையே உள்­ளது. அதனால் சமூ­கத்தின் நன்­மைக்­காக செயற்­ப­டு­கின்­ற­வர்கள் தண்­டிக்­கப்­ப­டு­கின்­றார்கள். அத்­த­கைய ஒரு­வர்தான் ஞான­சார தேரர். அவர் செய்­யாத குற்­றத்­திற்­கா­கவே தண்­டிக்­கப்­பட்­டுள்ளார் என்­பதை நிரூ­பிப்­ப­தற்கு போதி­ய­ள­வான சாட்­சிகள் எம்­மிடம் உள்­ளன.

ஞான­சா­ர­ருக்கு ஜனா­தி­பதி பொது­மன்­னிப்பு வழங்­குவார் என்ற நம்­பிக்­கை­யுள்ள போதிலும், அவ்­வாறு விடு­விக்­கப்­ப­ட­வில்லை எனின் ஜெனீவா மனித உரி­மைகள் பேர­வையில் முறைப்­பாடு செய்­யவும் தயா­ரா­கவே இருக்­கின்றோம். கொலைக்­குற்றம் இழைத்தோ, ஊழல் மோச­டி­களில் ஈடு­பட்டோ ஞான­சாரர் சிறை செல்­ல­வில்லை. மாறாக 30 வரு­ட­கால யுத்­தத்தை முடி­விற்கு கொண்டு வரு­வ­தற்கு தம்மை அர்ப்­ப­ணித்து செயற்­பட்ட புல­னாய்வு அதி­கா­ரி­களை சிறை­யி­ல­டைப்­ப­தற்கு எதி­ரா­கவே அவர் குரல் கொடுத்தார். வசந்த கரன்னாகொடவை கைது செய்வதற்கு திட்டமிடப்படுகின்றது என்ற தகவல்களின் ஊடாக யுத்தத்தை வென்றெடுத்தவர்களை சிறையிலடைக்கும் செயற்பாடுகள் இன்னமும் தொடர்கின்றன என்பது புலனாகின்றது. எனவே, நாட்டு மக்கள் அனைவரும் ஞானசார தேரரை மீட்கும் நடவடிக்கைக்கு பங்களிப்பு வழங்க வேண்டும் என்றார்.

4 comments:

  1. Unwanted news for us. Please don't promote this Terror Monk. By Publishing unwanted/useless news.

    This Terror Monk already destroyed the unity of all community and the Buddhism..
    This Terror Month damaged the society more than the Drugs..

    ReplyDelete
  2. உலகில் ஏனைய நாடுகளைப் போல இந்த நாடும் சட்டத்தின் ஆதிபத்தியத்தில் தான் இயங்குகின்றது.சட்டத்தைக் கண்மூடித்தனமாக விமர்சிப்பதும் சட்டத்தைப் பாதுகாக்கும் முக்கிய நிறுவனங்களான நீதிமன்றம், கௌரவ நீதிபதிகளைக் கேவலமாகவும் அநாகரீகமான முறையில் வசைபாடுவதும் இந்த நாட்டின் சட்டத்தை அவமதிப்பதைப் போன்ற பாரதூரமான குற்றமாகும் இந்த உண்மை ஏனைய நாட்டுப் பிரஜைகளைப் போல் இந்த நாட்டின் பிரஜைகளும் அறிந்து அவற்றை உரியமுறையில் மதித்து கௌரவிக்க தெரிந்துவைத்திருக்க வேண்டும் என சட்டம் ஒவ்வொரு பிரஜையிடமும் எதிர்பார்க்கின்றது. அதற்கு மாற்றமாக சட்டத்தை கண்மூடித்தனமாக வசைபாடி கௌரவ நீதிபதிகளையும் நிந்தித்தால் அதன் விளைவைத்தான் இந்த சாமியார் அனுபவிக்கின்றார். எத்தனை ஆயிரம் பேர் ஒன்றுகூடி இந்த சாமியார் குற்றம் செய்யவே இல்லை என பறைசாடினாலும் நீதிமன்றத்தின் தீர்ப்பு தான் இறுதியானது என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ளவேண்டும். பொய்யையும் உண்மையைப் பிரழ்ந்த இட்டுக் கட்டுக் கதைகளையும் பரப்பி பொதுமக்களை வழிகெடுக்கும் முயற்சியும் சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதையும் உரியவர்கள் விளங்கிக்கொள்ள இத்தால் ஞாபகப்படுத்துகின்றேன்.

    ReplyDelete
  3. தலைப்பு சரி, ஏனென்றால் அவர் செய்த குற்றத்துக்கு இன்னும் தண்டனை வழங்கப்படவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.