Header Ads



இந்தியாவுக்கு உதவ, முடிவு செய்திருக்கிறோம் - இம்ரான் கான்

பாகிஸ்தான் இனி தனது நிலத்தில் தீவிரவாதத்தை அனுமதிக்காது எனவும், பொருளாதாரத்தை முன்னேற்றுவதிலேயே நோக்கம் கொண்டுள்ளோம் எனறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிதிதுள்ளார்.

இதுகுறித்து சிந்த்தில் இடம் பெற்ற பேரணி ஒன்றில்   கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

பாகிஸ்தான் தனது நிலத்தை எந்தக் காரணத்துக்காகவும்  தீவிரவாதம் பயன்படுத்த அனுமதிக்காது. இது புதிய பாகிஸ்தான். இது புதிய காலம். இந்த பாகிஸ்தான் அமைதியானது, நிலைத்தன்மையுடையது. பொறுப்புணர்வுள்ள நாடு.  நாங்கள் எந்த தீவிரவாத இயக்கமும் இங்கு செயல்பட அனுமதிக்க மாட்டோம்.

நாங்கள் பிடிப்பட்ட இந்திய விமானி அபிநந்தனை அவர் நாட்டுக்குதிரும்ப அனுப்பினோம். ஏனென்றால் எங்களுக்கு போர் தேவையில்லை.  நாங்கள் இந்தச் செய்தியை இந்தியாவுக்கு மீண்டும் தெரிவிக்கிறோம். 

நாங்கள் புல்வாமா தாக்குதல் விசாரணையில் இந்தியாவுக்கு உதவ முடிவு செய்திருக்கிறோம். இது பயத்தினால் எடுத்த முடிவு என்று யாரும் நினைக்க வேண்டாம்.  ஏனென்றால் நாங்கள் காணவிருக்கும் பாகிஸ்தான் வறுமையை ஒழிக்கும். எங்களது கொள்கைகள் மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

தீவிரவாத இயக்கங்களை பாகிஸ்தானில் முன்னர் அனுமதித்தது எந்தக் காரணமாக இருந்தாலும், இனி இந்த மண்ணில் தீவிரவாத இயங்களை அனுமதிக்கமாட்டோம் என்று அனைத்து கட்சிகளும் முடிவு செய்துள்ளோம்.

தர்பர்கர் மாவட்டத்தில் பாதி மக்கள் தொகை இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள். இன்றைய இந்திய அரசு சிறுபான்மையினருக்கு செய்து கொண்டிருப்பதை பாகிஸ்தான் பிரதிப்பலிக்கவில்லை. நாங்கள் எங்களது  சிறுப்பான்மை மக்களை பாதுகாப்போம்” என குறித்த நிகழ்வில் இம்ரான் கான்  தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்களின்  செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிபடத்தக்கது.

2 comments:

  1. ஒரு இந்து பாக்கிஸ்தானில் கிாிகெட் விளையாடியது கிடையாது, இந்து அமைச்சரக வர முடியாது, சட்டத்தின் படி ஒரு முஸ்லிம் 2 இந்திவிற்கு சமன் பாக்கிஸ்தான் இஸ்லாமிய குயரசு ஆனால் இந்தியா ஒரு பொது நாடு இந்தியா காந்தி பிறந்த மண்

    ReplyDelete
  2. IF he is honest with his statement, this will be a good initiative for the Pakistanis to turn into civilized world.

    ReplyDelete

Powered by Blogger.