Header Ads



நான் யார் என்பதை, ரணிலுக்கு விரைவில் காட்டுவேன் - அப்பம் கொடுத்துவிட்டு சீறிய ஜனாதிபதி

“வெளிநாட்டமைச்சர் திலக் மாரப்பனவுக்கும் அமைச்சின் செயலாளருக்கும் என்ன நடக்கிறதென்பதே தெரியாது. உத்தரவுகள் எல்லாம் பிரதமர் அலுவலகத்தில் இருந்து தான் செல்கின்றன. ஜெனீவாவில் மாரப்பன ஆற்றவுள்ள உரையை வாசித்து நான் வெட்டினேன். திருத்தங்களை செய்தேன்…”

இப்படி தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன…

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித்தலைவர்ளுக்கு நேற்று இராப்போசன விருந்தொன்றை வழங்கி அவர்களுடன் நீண்ட அரசியல் பேச்சுக்களை நடத்தினார் மைத்ரி.

தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில , திஸ்ஸ விதாரண , ராஜா கொல்லூரே , டியூ குணசேகர ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த விருந்தில்சுடச் சுட அப்பம் பரிமாறப்பட்டது

ஜெனீவா விவகாரம் குறித்து இங்கு விசனத்துடன் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி , அது தனது கையை மீறி நடந்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“ ஜெனீவா விவகாரம் குறித்து நான் இறுதி நேரமே அறிவுறுத்தப்பட்டேன். அமைச்சர் திலக் மாரப்பனவை அழைத்து அவர் வாசிக்கவுள்ள அறிக்கையை கேட்டேன். அதில் உள்ள பல விடயங்களை ஏற்க முடியாது. அதனால் திருத்தினேன். நான் திருத்திய அறிக்கையையே அவர் வாசிக்கவுள்ளார். அவருக்கும் தெரியாமல் சில விடயங்கள் நடக்கின்றன. பிரதமர் அலுவலகம் இயக்குகின்றது.ஆனால் நான் யார் என்பதை பிரதமருக்கு விரைவில் காட்டுவேன்..”

என்றும் இங்கு கூறியுள்ளார் மைத்ரி

-tamilan

1 comment:

  1. சனாதிபதியின் இந்த பேச்சுக்குப் பதிலை கடைசியாக ஹிருணிகா பா.உ, பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் சரியான பதில் கிடைக்கின்றது. இவர் இன்னும் கிராம சேவகரின் மூன்றாம் தர பணிகளைத் தான் தொடர்ந்து கொண்டிருக்கின்றார் என்பது அவருடைய பேச்சில் இலகுவாகப் புரிகின்றது.சுடச்சுட ஆப்பையுடன் கதை முடிந்து விடும் நேரம் வெகு தூரத்தில் இல்லை போல் தெரிகி்ன்றது.

    ReplyDelete

Powered by Blogger.