Header Ads



பொது வேட்பாளர் பற்றி, அமெரிக்கன்காரிக்கு ரணில் சொன்ன தகவல்

அமைச்சர் மங்கள சமரவீரவின் 30 வருட அரசியல் வாழ்வை கெளரவிக்கும் நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்ததல்லவா?
அதன்போது இடம்பெற்ற சுவாரஷ்ய சம்பவம் இது...
இதில் கலந்து கொள்ள வந்திருந்த அமெரிக்காவின் முன்னாள் இராஜதந்திரி சமந்தா பவர் மற்றும் பிரதமர் ரணில் ஆகியோர் மேல்மாடிக்கு லிப்ட் ஒன்றில் செல்ல காத்திருந்தனர்...
அப்போது அங்கு குமார் வெல்கம வருவதை கண்ட ரணில் அவரையும் லிப்ட்டுக்குள் வருமாறு அழைத்தார்.
அப்படி வந்த குமார் வெல்கமவை சமந்தா பவருக்கு அறிமுகப்படுத்திய ரணில், “ இவர் தான் குமார் வெல்கம.. அடுத்த ஜனாதிபதி தேர்தலின் பொது வேட்பாளர்..” என்று அறிமுகப்படுத்தினாராம்..”
அதை உண்மை என்று நம்பிய சமந்தா , குமார் வெல்கமவுக்கு கைலாகு கொடுத்து வாழ்த்தினாராம்...
அதற்குள் லிப்ட் மேல் மாடிக்கு சென்றதால் இவர்கள் பிரிந்து சென்றனர்..
ஆனால் வெல்கம முகத்தில் பூரிப்பு...
அமெரிக்காவே விஷ் பண்ணிவிட்டதே..!

-Siva-

2 comments:

  1. Mr. Welgama Was a respectable human being...

    ReplyDelete
  2. Ranil plays this game so that if Welgama wins, Ranil can continue as Prime Minister. Welgama seems to be a principled man, but when elected to office there is a possibility of unexpected changes. As of now everything is shrouded in mystery. Allah knows best.

    ReplyDelete

Powered by Blogger.