Header Ads



மனுவை வாபஸ்பெற்ற, மஹிந்த ராஜபக்ஷ

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை செயற்படுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இருந்து மீளப் பெறப்பட்டுள்ளது. 

குறித்த மனு பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் பிரீதி பத்மன் சுரசேன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. 

இதன்போது இந்த தடையுத்தரவு சம்பந்தமான மேன்முறையீட்டு நீதிமன்ற மனு, மனுதாரர்களான ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் ​தேசிய கூட்டமைப்பு, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் 122 பாராளுமன்ற உறுப்பினர்களால் மீளப் பெறப்பட்டதால் இநடத வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டிய தேவையில்லை என்று மனுதாரர் சார்பில் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. 

அதன்படி இந்த மனுவை மீளப் பெறுவதாக மனுதாரர்கள் நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து, அதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறனார்.

No comments

Powered by Blogger.