Header Ads



ரணில் எதிர்த்தாலும், ஜனாதிபதிக்கு எதிராக வாக்களிப்போம் - குட்டி யானைகள் திட்டவட்டம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க விரும்பாத போதிலும் இடம்பெறும் விடயங்களை எம்மால் பார்த்திருக்க முடியாது எனவும், ஜனாதிபதிக்குரிய அமைச்சுக்களுக்கான வரவு செலவு திட்ட பிரேரணைகளுக்கு ஐ.தே.கட்சி பின்னாசன எம்.பி.க்கள் எதிராக வாக்களிக்கவுள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னாசன உறுப்பினர்கள் 10 அல்லது 15 பேர் இணைந்து ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கவே நாம் தீர்மானித்திருந்தோம். இப்போது அந்த எண்ணிக்கை 50 ஐயும் தாண்டியுள்ளது. சில அமைச்சர்களும் எம்முடன் இணைந்து கொண்டுள்ளனர்.

பிரதமர் நிச்சயம் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பார். இருப்பினும், ஜனாதிபதியின் அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளை எம்மால் பார்த்திருக்க முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

1 comment:

Powered by Blogger.