Header Ads



மகிந்த ராஜபக்சவின் சிலையை, பங்களாதேசில் வணங்க வேண்டும் - ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பங்களாதேஷ் நாட்டுக்கு பொற்காலம் உதயமானதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத்திட்டத்தின் குழு நிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இலங்கை இழந்த ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையின் பயன் பங்களாதேஷூக்கு கிடைத்தது.

இதன் ஊடாக பங்களாதேஷ் தனது ஆடை ஏற்றுமதியை 400 வீதமாக அதிகரித்துக்கொண்டது. இதனால், பங்களாதேஷ் மகிந்த ராஜபக்சவின் சிலையை நிர்மாணித்து அதனை வணங்க வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.