March 06, 2019

முஸ்லிம்களுக்கு எது மிஞ்­சப்­போ­கின்­றது? பேரம்பேசும் சக்­தியை இல்­லா­ம­லாக்­க திரை­ம­றைவில் சதி

இன்­றைய கால­கட்­ட­மா­னது 1978 தொடக்கம் 2019 வரை இந்­நாட்டு முஸ்­லிம்கள் ஆனு­ப­வித்து வரு­கின்ற அர­சியல் உரி­மை­களை தலை­கீ­ழாகப் புரட்டிப் போடு­கின்ற கால­மாக இந்த வருடம் மாறப்­போ­கின்­றது. அடுத்த சில மாதங்­களில் நாட்டில் முஸ்லிம் சமூ­கத்­திற்கு எது மிஞ்­சப்­போ­கின்­றது என்ற அச்சம் இன்று முஸ்­லிம்­க­ளுக்கு மத்­தியில் எழுந்­தி­ருக்­கின்­ற­தென உள்­ளூ­ராட்சி மாகான சபைகள் இரா­ஜாங்க அமைச்­சரும், முஸ்லிம் கல்வி, சமூக ஆய்­வுகள் நிறு­வ­னத்தின் ஸ்தாபகத் தலை­வ­ரு­மாக எச்.எம்.எம்.ஹரீஸ் தெரி­வித்தார்.

முஸ்லிம் கல்வி, சமூக ஆய்­வுகள் நிறு­வ­னத்தின் (மெஸ்ரோ அமைப்பு) ஏற்­பாட்டில் சம்­மாந்­துறைத் தொகுதி இளை­ஞர்­க­ளுக்­கான “வலி­மை­யான சமூ­கத்­திற்கு ஆளு­மை­யான இளை­ஞர்கள்” எனும் தொனிப்­பொ­ருளில் சமூக மாற்­றத்­திற்­கான தலை­மைத்­து­வத்­துவ செய­ல­மர்வு நேற்­று­முன்­தினம் சம்­மாந்­துறை அப்துல் மஜீத் நகர மண்­ட­பத்தில் முஸ்லிம் கல்வி, சமூக ஆய்­வுகள் நிறு­வ­னத்தின் தலைவர் சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணியும் பதில் நீத­வா­னு­மான ஏ.எம்.நஸீல் தலை­மையில் இடம்­பெற்­றது.

அதில் “இலங்­கையின் சம­கால அர­சி­யலும், முஸ்லிம் இளை­ஞர்­களின் வகி­பா­கமும்” எனும் தலைப்பில் வள­வா­ள­ராக க்கலந்­து­கொண்டு அவர் கருத்­துரை வழங்­கி­ய­போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கை­யில், நாங்கள் இது­வரை காலமும் பெருந்­த­லைவர் அஷ்ரப் விட்­டு­வைத்­தி­ருந்த வித்­துக்­க­ளி­லி­ருந்து எங்­க­ளு­டைய சமூ­கத்தை ஏதோ ஒரு அடிப்­ப­டையில் கரை­சேர்த்து வந்து கொண்­டி­ருக்­கின்றோம். ஆனால் எதிர்­கா­லத்தில் நாட்டில் எமது இளை­ஞர்கள் எதிர்­கால தலை­வர்கள் என்ற அங்­கீ­கா­ரத்தை தருமா என்ற ஒரு வினா தற்­போது எழுந்­தி­ருக்­கின்­றது.

1978 ற்குப் பின்னர் வந்த இன­மு­ரண்­பாடு என்­பது நாட்டில் பெரும்­பான்மை சமூ­கத்­தி­லி­ருந்து சிறு­பான்மை சமூ­கத்தை பல ரூபங்­களில் இடை­வெ­ளி­களை கூட்­டி­யி­யி­ருந்த கால­கட்­ட­மா­க­வி­ருந்­தது. அது குறிப்­பாக எங்­க­ளு­டைய தமிழ் சமூகம் தங்­களின் இருப்­புக்­கா­கவும், உரி­மை­க­ளுக்­கா­கவும் ஆயு­தப்­போ­ராட்­டத்­தினை ஆரம்­பித்­த­போது அது பல­கோ­லங்­களில் வட கிழக்கு மண்ணில் இரத்த ஆறினை ஓடச்­செய்­த­துடன், தமிழ் சமூ­கத்தின்  அர­சியல் விடு­த­லைதான், உரி­மைதான் எங்­க­ளுக்­குத்­தேவை வேறு எதுவும் தேலை­யில்லை என அவர்­க­ளு­டைய போராட்டம் விரீயம் எடுத்­தி­ருந்­தது. அதன் விளைவு வட கிழக்­கி­லுள்ள பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமிழ் இளை­ஞர்கள் ஆயுதம் ஏந்­தி­னார்கள்.

அந்த ஆயுதம் ஏந்­துதல் தெற்­கி­லுள்ள அர­சியல் தலை­மை­க­ளான ஜனா­தி­பதி தொடக்கம் பாரா­ளு­மன்றம் வரை உலுக்கி எடுத்­தி­ருந்­தது. இதனால் சர்­வ­தேசம் வந்­தது. இந்­திய அமை­தி­காக்கும் படை வந்­தது. இறு­தியில் அது இலங்கை –- இந்­திய ஒப்­பந்­த­மாக மாறி­யது. ஆனால் துர­திஷ்­ட­வசம் 1982 வரை இந்­நாட்டு முஸ்­லிம்­க­ளுக்கு தலை­மை­தாங்­கு­வ­தற்கு தலை­மை­யொன்று இருக்­க­வில்லை. சர்­வ­தே­சத்­திற்கு அழுத்தம் கொடுப்­ப­தற்கு தலை­மை­யொ­னன்று இருக்­க­வில்லை. அதன்­வி­ளைவு 1987ஆண்டு இலங்கை -– இந்­திய ஒப்­பந்­தத்தின் ஊடாக வடக்கும்,கிழக்கும் இர­வோடு இர­வாக சொந்த மண்­ணிலே முஸ்­லிம்கள் அடி­மைப்­பட்­டி­ருந்­தனர். ஈட்­டிற்றில் வடக்­கி­லி­ருந்த முஸ்­லிம்கள் விரட்­டி­ய­டிக்­கப்­பட்­டனர். முஸ்­லிம்கள் சொல்­லொணாத் துய­ரங்­களை அனு­ப­வத்­தி­ருந்­தனர்.

இந்­நாட்டு முஸ்லிம் சமூகம் கருத்தில் கொள்­ளப்­ப­டாமை உள்­ளிட்ட பல கார­ணிகள் முஸ்­லிம்­களின் அர­சியல் தனித்­துவம் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யதன் தேவையை வலி­யு­றுத்தி நின்­றன.

இவ்­வா­றான சூழலில் ஆயுதம் தூக்­கிய முஸ்லிம் இளை­ஞர்­களை, அந்தக் கலா­சா­ரத்­தி­லி­ருந்து மீட்­டெ­டுத்து, அவர்­க­ளுக்கு ஓர் அர­சியல் தலை­மைத்­து­வத்­தினை வழங்க வேண்டும் என்­ப­தற்­கா­கத்தான் முஸ்லிம் காங்­கிரஸ் எனும் பேரி­யக்­கத்­தினை பெருந்­த­லைவர் எம்.எச்.எம். அஷ்ரப் ஆரம்­பித்தார்.

இந்தப் பேரி­யக்­கத்தின் மூலம் முஸ்லிம் சமூ­கத்தின் எதிர்­கால சிற்­பி­க­ளாக இளை­ஞர்கள் சிந்­தித்து அதற்­காக முஸ்லிம் காங்­கிரஸ் எனும் இயக்­கத்தை உரு­வாக்கி முஸ்லிம் இளை­ஞர்­களை ஆயுதக் கலா­சா­ரத்­திக்குள் கால­டி­வைப்­பதை தடுத்தார். என்­ப­தனை இன்­றைய இளை­ஞர்கள் மறந்­து­வி­டக்­கூ­டாது.

அஷ்ரப்  மர­ணிப்­ப­தற்கு முன்பு, இந்த இயக்­கத்தின் மூலம் ஆட்­சி­யா­ளர்­களை தீர்­மா­னிக்­கின்ற அத்­தி­யா­யத்­தினை நாட்டில் உரு­வாக்­கினார். அந்த அத்­தி­யாயம் இந்த நிமிடம் வரை மீண்டும் நிரூ­பிக்­கப்­பட்­டி­ருக்­கின்­ற­துடன், இன்று நாட்டின் முஸ்லிம் என்­பது நாட்டின் ஆட்­சி­யினை தீர்­மா­னிக்­கின்ற வலு­வாக மாறி­யி­ருக்­கின்­றது.

முஸ்லிம் சமூ­கத்­தினர் தீர்­மா­னிக்­கின்ற சக்­தி­யினை நாட்­டி­லி­ருந்து ஒழிக்க வேண்டும் என்­ப­தற்­காக தமிழ் தலை­மைகள் தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பு என்ற விட­யத்­தினை முன்­னெ­டுத்­துள்­ளன. இதனை இந்த ஆட்­சி­யா­ளர்கள் தூக்­கிப்­பி­டித்­தி­ருக்­கின்­றனர்.

எங்­க­ளுக்குள் இருக்­கின்ற மிகப்­பெ­ரிய சவால் அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கத தேவை­யா­க­வி­ருக்­கின்ற தமிழ் தலை­மை­களும், தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பும் கோரி நிற்­கின்ற விடயம் சமஷ்டி அர­சி­ய­ல­மைப்பும், அதி­காரப் பர­வ­லாக்­க­மு­மாகும். இதனால் எமது சமூகம் எந்­த­ளவு பய­ன­டையப் போகின்­றது என்­பதை சிந்­திக்க வேண்டும்.

நாட்டில் அண்­மையில் ஏற்­பட்ட அர­சியல் நெருக்­க­டி­யின்­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எடுத்­துள்ள அவ­தாரம் எங்­க­ளுக்கு பெரும் அச்­சத்­தினை தோற்­று­வித்­துள்­ளது. தேசிய அர­சாங்­கத்­தி­லி­ருந்து சுதந்­தி­ரக்­கட்­சி­யினர் வெளி­யே­றிய பின்பு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பினர் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு ஆத­ரவு வழங்­கி­யதால் இன்று பிர­த­மரும், அமைச்­ச­ர­வையும் அவர்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் கோரிக்­கை­யினை நிறை­வேற்ற வேண்டும் என்ற நிலை­மைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர். தற்­போது ஆட்­சியில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பினர் எதைப் பிடுங்க முடி­யுமோ அவற்­றிலில் மிகக் கவ­ன­மாக இருந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

நாட்டில் தனி­ந­பர்­களின் அர­சி­யலை தீர்­மா­னிப்­ப­தற்­காக மீண்டும் ஒரு அர­சி­ய­ல­மைப்­பினை கொண்­டு­வந்து ஜனா­தி­பதி முறையை ஒழித்து பிர­தமர் ஆட்­சியை ஏற்­ப­டுத்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­பக்‌ஷ ஆகிய அர­சி­யலில் மூன்று துரு­வங்­க­ளா­க­வுள்­ள­வர்கள் ஒரு நேர்­கோட்டில் இன்று வந்­துள்­ளனர். அதற்கு நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்கும் 20வது திருத்­தச்­சட்டம் மூலம் மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் களம் அமைத்துக் கொடுத்­துள்­ளனர்.

கடந்த 45 வரு­ட­கா­ல­மாக அனு­ப­வித்து வந்த பேரம்­பேசும் சக்­தியை இல்­லா­ம­லாக்­கு­வற்கு திரை­ம­றைவில் பல்­வேறு வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. எனவே, எமது சமூ­கத்தின் உரி­மை­களை எந்த விட்­டுக்­கொ­டுப்­பு­க­ளுக்கும் இல்­லாமல் பாது­காக்க வேண்டும். அதற்கு இளை­ஞர்கள் எமது அர­சியல் தலை­மை­க­ளுக்கு அழுத்தம் கொடுக்­கவும், மக்களை விழிப்படையச் செய்யவும் வேண்டும். என்றார்.
-Vidivelli

1 கருத்துரைகள்:

Here is the answer Hon. M.M. Harees (UNP MP).
The Muslims are NOT going to loose any of the political rights we have enjoyed from 1978 to 2019 (now) as stated by you, Insha Allah. What is going to happen is that you and your leader Rauf Hakeem are going to loose the Muslim votes that you have been getting all these yesrs by hoodwinking and deceiving the Muslim vote bank, Insha Allah. The SLMC and the ACMC with some of their cronies like the ACJU and Muslim Civil Society Organizations have been promoting the following. The Muslim vote bank has started to act "CLEAN" from these, Alhamdulillah.
Let us face REALITY and the TRUTH (YATHAARTHAM).
We Muslims are known for NOT leading the Muslim (Islamic Way of Life) bestowed by our belief and FAITH.
We are (especially) the POLITICIANS) are NOT UNITED.
We (especially the POLITICIANS) are DISHONEST, DECEPTIVE, SELFISH and CROOKED.
Our dealings are NOT CLEAN with other Communities.
We have BETRAYED the political leaders of the country who are so much loved by the MAJORITY SINHALA PEOPLE.
We are ARROGANT and EXTRAVAGANT in our day to day life.
We are SELF CENTERED and NOT COMMUNITY MIMDED.
WE are OPPRTUNISTIC, especially in POLITICS. Our Muslim Politicians have back-stabbed the most loved Sinhala leaders like the former President after STOOGING to him and his siblings and politically destroyed them which the Buddhist, especially the Monks despite.
We will “buy” anyone by our ill earned money power to get our things done, even against our community and its members.
We practice the CULTURE of SMUGGLING and dealing in DRUGS as normal business though it is banned in ISLAM, and we think going to Mecca (making UMMRAH) purifies us from those SINS.
What you and your leader Rauf Hakeem is doing is “STAGING POLITICAL DRAMAS” just to HOODWINK the Muslim voters/vote bank and to gather the Muslim votes in the Eastern provinve at the next elections, Insha Allah.
THIS IS WHY "THE MUSLIM VOICE" IS PRAYING IT IS TIME UP THAT A NEW POLITICAL FORCE THAT WILL BE HONEST AND SINCERE THAT WILL PRODUCE 'CLEAN' AND DILIGENT MUSLIM POLITICIANS TO STAND UP AND DEFEND THE MUSLIM COMMUNITY POLITICALLY AND OTHERWISE, ESPECIALLY FROM AMONG THE YOUTH/YOUNGER GENERATION HAS TO EMERGE FROM WITHIN THE SRI LANKA MUSLIM COMMUNITY TO FACE ANY NEW ELECTIONS IN THE COMING FUTURE, INSHA ALLAH.

Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart, Former District Organizer - SLFP, Trincomalee District and Convener - "The Muslim Voice".

(Note: These comments are NOT made as MALICE against any politician or political party. It is written to kindle the aspirations and inspiration of the Muslims of Sri Lanka, Insha Allah).


Post a comment