Header Ads



நியூசிலாந்து பிரதமரை பார்த்து, சிறுமி கேட்ட கேள்வி

நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்து போன மூன்று மாணவர்களின் பள்ளிக்கு சென்று பார்வையிட்டதோடு மட்டுமல்லாமல் தனது இரங்கலையும் அவர்களோடு பகிர்ந்துகொண்டார்.

Christchurch's Cashmere High School நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்துகொண்ட போது, haka அசைவுகளுடன் மாணவர்கள் அவரை வரவேற்றனர்.

இந்த பள்ளியை சேர்ந்த Sayyad Milne (14) Hamza Mustafa (16) மற்றும் முன்னாள் மாணவர் Tariq Omar (24) ஆகியோர் துப்பாக்கிசூடு சம்பவத்தில் உயிரிழந்தனர்.

மாணவர்களிடம் பேசிய பிரதமர், மாணவர்கள் என்னை வரவேற்ற விதத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தங்களது நண்பர்களது இறப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த சம்பவம் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது, உங்களுக்கு தேவையான உதவிகளை என்னிடம் கேளுங்கள் என கூறியுள்ளார்.

இந்த நிகழ்வின் போது மாணவி ஒருவர் பிரதமரை பார்த்து, நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு இல்லை....நான் கவலையாக உள்ளேன் என பதிலளித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.