Header Ads



பாராளுமன்றத்தில் ஹரிஸ் ஆக்ரோசம், தமிழ் - முஸ்லிம் இனக்கலவரம் உருவாகுமென விஜித ஹேரத் எச்சரிக்கை

சாய்ந்தமருது பிரதேச சபை விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் இன்று -28- விஜித ஹேரத் எம்.பிக்கும் பிரதி அமைச்சர் ஹாரிஸ்ஸுக்கும் இடையில் வாக்குவாதம் நிலவியது.  

பாராளுமன்றத்தில் இன்று உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்றபோது மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்,

அனைவரும் இணக்கம் தெரிவித்த ஒரு விடயத்தில் பிரதி அமைச்சர் ஹாரிஸ்ஸின் தனிப்பட்ட  அரசியல் வாக்குகளை மட்டுமே கருத்தில் கொண்டு பிரச்சினையை உருவாக்குகின்றார். இந்த செயற்பாடு எதிர்காலத்தில்  தமிழ் முஸ்லிம் இனக்கலவரம் ஒன்றில் வந்தே முடியும் என்பதை முன்கூட்டியே எச்சரிக்கின்றேன் என விஜித ஹேரத் எம்.பி எச்சரிக்கை விடுத்தார். 

இது தொடர்பில் சபையில் இடம்பெற்ற வாக்குவாதத்தின் ஒரு பகுதியில்...

பிரதி அமைச்சர் ஹரிஸ் :- இது குறித்து நாம் பேசுகின்றோம், எல்லை நிர்ணய குழுவுடன் பேசுகின்றோம். இது குறித்து குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.இது மிகவும் நெருக்கடியான பிரச்சினை 

விஜித எம்.பி :- உங்களிடம் தெளிவான பதில் இல்லை, நீங்கள்தான் பிரச்சினையாக உள்ளீர்கள், உங்களால்தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எல்லைநிர்ணய பிரச்சினை என ஒன்றும் இல்லை. இதனை இப்படியே விட்டால் பாரிய இன மோதலில் வந்து முடியும். நான் இப்போதே முன்கூட்டி எச்சரிக்கை விடுக்கின்றேன். மனதில் வைத்துகொள்ள வேண்டும். 

3 comments:

  1. இந்த பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் அதுதான் தேவை. முஸ்லிம் தமிழ் சமூகங்கள் இதை நன்கு உணர்ந்து விட்டுக்கொடுத்து ஒற்றுமையை பேன வழிவகுக்க வேண்டும். இல்லாவிடில் தம் சமுகத்தின் அழிவை தாமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டி வரும்

    ReplyDelete
  2. கல்முனை பிரதேச செயலகம் பிரியும் விடயத்தில் அமைச்சர் ஹாரிஸ் என்ன சொன்னாலும் பொய்யானது தான்.

    ReplyDelete
  3. இந்த இனவாத jvp பொறுக்கிகள் 2015க்கு பின் டயஸ்போறாக்களில் அடிமையாகிவிட்டனர்

    ReplyDelete

Powered by Blogger.