Header Ads



தவறான திருமணம் செய்த மைத்திரியை, நானே தலையிட்டு விவாகரத்து செய்யவைத்தேன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தவறான திருமணத்தை செய்து கொண்டதாகவும் கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி தான் தலையிட்டு விவாகரத்து செய்து, மணமகனை மீண்டும் அழைத்து வந்தாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி கண்டியில் நேற்று ஒழுங்கு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட கருத்து குறித்து பேசிய மகிந்த ராஜபக்ச, 6வது பராக்கிரமபாகு மன்னன் விவசாயம் செய்யவில்லை எனவும் முதலாவது பராக்கிரமபாகுவே விவசாயத்தை போஷித்ததாகவும் ரணில் விக்ரமசிங்கவுக்கு தவறி விட்டதாகவும் கூறியுள்ளார்.

கொக்கேய்ன் போதை காரணமாக இந்த தவறு நடந்திருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் மைத்திரி அணியை சேர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை.

2015ஆம் ஆண்டின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கியிருந்தன.

இந்த நிலையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் குழப்பத்தினால் கூட்டாட்சி பிளவுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.