Header Ads



பள்ளிவாசல் படுகொலை மூலம் நியூசிலாந்தில் அமைதியின்மையை ஏற்படுத்த நினைத்த கொலைகாரன் தோற்றுவிட்டான்

கிரைஸ்ட்சேர்ச்சில் பள்ளிவாசல் படுகொலை மூலம் நியூசிலாந்தில் அமைதியின்மையை ஏற்படுத்த நினைத்த கொலைகாரன் உண்மையில் தோற்றுவிட்டான், அவனின் அந்த வெறுப்புணர்வை தூண்டும் திட்டம், நியூசிலாந்து மக்களிடையே ஒரு பெருமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவனின் பயங்கரவாத நடவடிக்கைக்கு எதிராக மக்கள் திரண்டு தங்கள் ஒற்றுமையையும் வெளிக்காட்டி உலகுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார்கள் என்று ஆக்லாந்தின் மாநகர முதல்வர் பில் கொப் அவர்கள் தெரிவித்தார்.

இம்று நியூசிலாந்து தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற வருடாந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மாநகர முதல்வர் மேலும் தெரிவிக்கையில், உலகின் மூத்த மொழியான தமிழ் நியூசிலாந்திலும் பேசப்படுவது பெருமையளிக்கிறது என்றும், பல்லின மக்கள் வாழும் உலகில் ஒரு முக்கிய நகரமாக ஓக்லாந்து மாறி வருகிறது என்றும் அது சார்பாக தான் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.