Header Ads



குளிரூட்டப்பட்ட அறைகளில், உள்ள ஆபத்து

'நோயாளியாக மாறி விடாமல் குளிர்ச்சியாக இருங்கள்' என்று ஆலோசனை கூறுகிறார் ஜயவர்தனபுர பல்கலைக்கழக வைத்திய பீட சிரேஷ்ட விரிவுரையாளர் டொக்டர் சந்தன ஹேவகே.

அன்றாட தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியேறும் அநேகமானோர் ஒரு நாளில் 8 மணித்தியாலங்கள் அல்லது அதற்கும் அதிகமாக நேரத்தை கழிப்பது குளிரூட்டப்பட்ட அறைகளிலாகும். அதனால் அவர்களில் அநேகமானோர் சுவாசப் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றார்கள். அதிலிருந்து விடுபட வேண்டுமென்றால் குளிரூட்டியை பாவிக்கும் போது கவனமாக பாவிக்க வேண்டும் என்பது அவரது அறிவுரை ஆகும்.

காரியாலய ஊழியர்களின் வேலைத்திறனை அதிகரிப்பதற்காக காரியாலய சூழல் மிகவும் முக்கிய இடத்தை வகிக்கின்றது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். அதிலொன்று காரியாலயத்தினுள்ளே வெப்பநிலையை உடம்புக்கு சௌகரியமாக வைத்துக் கொள்வதாகும். உடம்பு தாங்கக் கூடியளவு உஷ்ணம், காற்று என்பவற்றை கருத்தில் கொண்டு குளிரூட்டியை அமைப்பது முக்கியமாகும். அதேவேளை அதிக வெப்பமான காலங்களில் head Stroke ஏற்படுவதை தடுப்பதும் அவசியம்.குளிரூட்டுவதன் மூலம் தூசு துணிக்கைகள் அகற்றி காற்றை சுத்தப்படுத்தலாம். காற்றிலுள்ள நீராவியைக் குறைப்பதனால் ஈரப்பதமான இடங்களில் பங்கசு போன்ற நுண்கிருமிகளின் வளர்ச்சியும் குறைக்கப்படுகின்றது.

குளிரூட்டப்பட்ட இடங்களில் நாளின் பெரும் பகுதியை கழிப்பதனால் சில பாதிப்புகள் ஏற்பட இடமுண்டு. நீரிழப்பு, தோல் வரட்சி, தோலில் ஒவ்வாமை ஏற்படல், பலவிதமான கிருமித் தொற்றுகளுக்கு ஆளாதல் என்பன அவற்றில் சிலவாகும்.

குளிரூட்டி சூழலில் உள்ள வெப்பத்தைக் குறைப்பதுடன் காற்றிலுள்ள ஈரப்பதத்தை அகற்றுவதால் அவ்வாறான அறைகளில் இருப்பவர்களின் உடம்பிலிருந்து நீர் அகற்றப்பட்டு நீரிழப்பு ஏற்படுகின்றது. அத்துடன் குளிரான சூழல் என்பதால் நீர் இருக்கும் அளவும் குறைகின்று. அதனால் நீரிழப்பு மேலும் அதிகரிக்கின்றது. அதனால் உடம்பில் சோர்வும், தொண்டையில் பாதிப்பும் கண் எரிச்சலும் ஏற்பட சந்தர்ப்பமுண்டு. கண்வில்லைகளை பாவிப்பவர்களுக்கும் பெரும் சிரமத்தை உண்டாக்கும்.

தோல் வரட்சியடைவதால் தோலில் அரிப்பு மற்றும் தோல் தடிமனதால் ஏற்பட வாய்ப்புண்டு.

அதைத் தவிர குளிரூட்டிகளை சரியாக பாரமரிக்காமையினால் தூசுகள், பக்றீரியாக்கள் சேர்வதால் தோலிலும் சுவாசத் தொகுதியிலும் பல விதமான ஒவ்வாமை நோய்கள் ஏற்பட ஏதுவாகின்றது. இந்நிலைமை தொடர்ந்து நீடித்தால் குளிரூட்டிகளால் உறிஞ்சிக் கொள்ளப்படும் நீராவி அதனுள்ளே தங்குவதனால் பலவிதமான பங்கசுகளும் பக்றீரியாக்களும் உருவாகி மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

குளிரூட்டியை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். அதேபோல் காற்றை துப்புரவு செய்யும் உபகரணங்களுடனான குளிரூட்டியை பாவிப்பதன் மூலம் அவ்வாறான பாதிப்புகளை குறைத்துக் கொள்ளலாம்.

உடம்பில் நீரிழப்பு, தோல் வரட்சியை தடுப்பதற்கு வளியிலுள்ள நீராவியின் வீதத்தை கட்டுப்படுத்தக் கூடிய குளிரூட்டிகளைப் பாவிக்கலாம். இங்கு வளியிலுள்ள நீராவியின் வீதத்தை நூற்றுக்கு 60_-70 வீதமாக வைத்திருப்பது அவசியமாகும். முக்கிய விடயம் என்னவென்றால் குளிரூட்டியை பாவிக்கும் போது நாம் அதில் வைக்க வேண்டிய வெப்பநிலையின் அளவானது எங்களுடைய வசதிக்கேற்ப குளிரூட்டியில் பெறப்படும் குறைந்த வெப்பநிலை அல்லாமல் காரியாலயத்தில் தமது கடமைகளை இலகுவாக செய்யக் கூடிய உயர்ந்தபட்ச வெப்பநிலையாக இருக்க வேண்டும். இலஙகை போன்ற நாடுகளுக்கு செல்சியஸ் 21-_25 பாகையாக இருக்கலாம். இந்த வெப்பநிலை மிகக் குறைந்தளவான செல்சியஸ் 18 பாகையாக நீண்டகாலம் வைத்திருப்பது உட்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதற்கு காரணம் நீங்கள் காரியாலயத்திலிருந்து வெளியே செல்லும் போதும் காரியாலயத்துக்கு உள்ளே வரும் போதும் சடுதியாக வெப்பநிலை மாற்றம் அடைவது உடம்புக்கு நலல்தல்ல.

ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால் நாம் குளிரூட்டியை பாவிப்பது இலகுவாக எமது காரியாலய வேலைளை புரிவதற்கே தவிர செயற்கையாக பனிக்கால காலநிலையை அனுபவிப்பதற்கல்ல. உடம்பில் நீரிழப்பு ஏற்படுவதையும் தோல் வரட்சியை தடுக்கவும் பின்பற்ற வேண்டிய முறைகள் என்னவென்றால் அதிகளவு நீர் அருந்துதல், யோகட், பழச்சாறு, பழங்கள் கொண்ட சமநிலை உணவுகளை உட்கொள்ளுதல் ஆகும். முடிந்தவரை குளிரூட்டியை பாவிக்காது யன்னல்களை திறந்து காற்றை உள்ளே வர விடுங்கள்.

குளிரூட்டியை பாவிப்பதால் பணிபுரியும் இடங்களில் அதிகளவு பலன்கள் கிடைக்கின்றன.என்றாலும் தற்போது குளிரூட்டியை அனைவரும் பாவிப்பதால் மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டியுள்ளது. அதற்காக அனல் மின்நிலையங்களை அமைக்க வேண்டிய தேவையேற்படுகின்றது. அதனால் வளிமண்டல வெப்பநிலையும் அதிகரிக்கின்றது. நாம் வாழும் சூழலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த குளிரூட்டிகளை தவிர்த்து வேறு மாற்றுவழிகளை தேட வேண்டிய நிலைமை எற்பட்டுள்ளது.

மதாரா முதலிகே

No comments

Powered by Blogger.