Header Ads



சட்டத்தரணி வேண்டாம், நானே வாதாடுகிறேன் - தீவிரவாதி அறிவிப்பு


நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாதி நீதிமன்றத்தில் தானே வாதாடி கொள்வதாக கூறியுள்ளான்.

நியூசிலாந்தின் Christchurch நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை நடத்திய அவுஸ்திரேலியாவை சேர்ந்த பிரண்டன் டாரண்ட், பொலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.

அப்போது பிரண்டன் சார்பாக வழக்கறிஞர் ரிச்சர்ட் பீட்டர் வாதாடினார்.

இந்நிலையில் ரிச்சர்ட் பீட்டர், AFP செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், பிரண்டன் தனக்காக வழக்கறிஞர் வாதாடுவதை விரும்பவில்லை.

அவர் தானே வாதாட வேண்டும் என முடிவெடுத்துள்ளார் என கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.