Header Ads



கோத்தபாயவையே ஜனாதிபதியாக்குவோம், மஹிந்தவின் புகைப்படம் ஒன்றே போதும்

புதிய அரசியலமைப்பின் மூலம் நாட்டினை பிளவுபடுத்தும் தலைமைத்துவத்தின் கீழ் செயற்படத்தயார் இல்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“புதிய அரசியலமைப்பின் மூலமாக நாட்டினைப் பிளவுபடுத்துவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்பதுடன், அவ்வாறான தலைமைத்துவத்தின் கீழ் செயற்படுவதற்கு நாம் தயாராக இல்லை.

அத்துடன், அவ்வாறான தலைமைத்துவத்திலிருந்து நாம் வெளியேறவும் தயாராகவே இருக்கின்றோம். அடுத்த தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷவையே ஜனாதிபதியாக்குவோம். அதற்கு மஹிந்தவின் புகைப்படம் ஒன்றே போதும். வேறு புதிய தலைமைத்துவம் எமக்கு அவசியமில்லை.

இந்நிலையில், வரவு செலவுத் திட்டத்தை வெற்றி கொள்வதில் அரசாங்கம் தடுமாறுகின்றது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற முடியாத நிலைமை காணப்படுகின்றது.

தேர்தல்களைச் சந்திக்கவும் ஐக்கிய தேசிய கட்சி தடுமாறி வருகின்றது. இந்நிலையில் அதிகாரத்தை பகிரவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது” என்றார்.

2 comments:

  1. மகிந்தட படம் இல்லாட்டி இவரும் இல்லையே...

    ReplyDelete
  2. படங்காட்டியே ஒன்ர வாழ்க்கையையே ஓட்டுறியடே வாப்பா.........

    ReplyDelete

Powered by Blogger.