Header Ads



உனது டயறியின் முதற்பக்கத்தில் எழுதிக்கொள்,, முஹம்மதின் படை தோற்பதில்லை


மரணம் கொல்லாது

  - கம்மல்துறை எம்மெல் . ஷரான் -

Brenton tarrant
வெறிக்குப் பிறந்த
வெள்ளையனே !
நாசிச நரித்தன வெளிப்பாடு
நீ !
சரித்திர சாபக்கேடு!

உன் ஆயுதங்களுக்கு
யுத்த நாகரீகம்
சுத்தமாய் இல்லை !
உன் மதத்தில்
உனக்கே சம்மதமில்லை 
அதனால் தான் உன்
அறிவில் இரத்த வெறி !

உன் இலக்கு
முஸ்லிமை கொன்றொழிப்பது -
புரிந்து கொள் -
இஸ்லாத்தை
இல்லாதொழிக்க
உன் அப்பன் பாட்டனாலும் முடியாது !

நீ வெற்றி பெறவுமில்லை -
நாம் தோற்கவுமில்லை !
மரணங்களால் நாம்
தோற்பதில்லை !

இது இறைவனின் நாட்டம் -
அவனாடும் ஆட்டம் !

தொழுகைக்கு வந்தவர்களை - உன்
தோட்டாக்கள்
வேட்டையாடியது கண்டு
அல்லாஹ்
வெட்கித் தலை குனிவதில்லை !

வணக்கஸ்தலங்களுக்கு
நாங்கள்
வாளோடு வருவதில்லை !
துஆ செய்யுமிடத்தில்
துப்பாக்கி தேவையில்லை !

இஸ்லாம்
தீவிரவாதமென்றால்
இன்று நீ இல்லை -
உனக்கொரு தேசம் இல்லை -
உன் அப்பன் பாட்டன் முப்பாட்டன்
சரித்திரமில்லை !
உங்கள் சமாதிகளில்
எங்கள்
சாம்ராஜ்யம் அமைந்திருக்கும் !

ஆயினும் -
அறிந்து கொள்
இஸ்லாம்
அமைதி மார்க்கம் !
உன் அநாகரீகத்தை
இதுதான்
மிகைத்து நிற்கிறது !

ஆயினும்
முஹம்மதின் உம்மத்
தோற்பதில்லை !
விரைவில் எழுச்சி கொள்ளும் !

அக்கினிக்குஞ்சுகள் நாம் -
அடிபனிய மறுக்கும்
அசத்திய சாம்ராஜ்யத்தை
அடித்து நொறுக்கும்
வீர முழக்கம்
உன் காது நோக்கி வருகிறது !

முஹம்மதின் படைக்கு
மரணம் சுவையானது !
துப்பாக்கியும் தோட்டாவும்
பட்டாசு போல் எமை
வரவேற்கும் -
உன்
பிணவாடை போலல்ல -
அது
சொர்க்கத்தின் மன வாடை !

வயள்களில்
களை பிடுங்கப்படும் போது -
சில கதிர்களும்
சேதாரம் ஆவது போல் -
எம் இனத்தின் மரனத்தில்
உன் வெற்றியின் தீர்ப்பை
எழுதிவிட முடியாது !

நீ போடும் எடை
சரிப்படா !
இது இருதயம் நிலை குலையா
முஹமதின் படையடா !

இப்படையை எதிர்கொள்ள
நீ தயாராகு !

எமது நம்பிக்கை_
துப்பாக்கியும் , தோட்டாவும்
அணுகுண்டும் ராக்கெட்டும்
அல்ல -
அல்லாஹ்வும் அவனது ரஸூலும் !

மரணம் - -
கொல்லாது!
வாழ வைக்கும்
எனது மார்க்கத்தை !

உனது மார்க்கம்
அழிக்கப்பட வேண்டியதல்ல -
திருத்தி எழுதப்பட வேண்டியது !

உனது டயறியின்
முதற் பக்கத்தில்
எழுதிக் கொள் -

முஹம்மதின் படை
தோற்பதில்லை !!
    

5 comments:

  1. Un maarkam alikkap pada vendiyathillai. Thiruththi eluthap pada vendiyavai enra varikal en adi manathai thottana. Nanri.

    ReplyDelete
  2. Beautiful! beautiful!May Allah please with you

    ReplyDelete
  3. Beautiful words " Mohamed in Padai Thopathilai " what a true words
    Thank you Mr.Sharaan

    ReplyDelete

Powered by Blogger.