Header Ads



சுழற்சி முறையில், தினமும் மின்வெட்டு (முழு விபரம் இணைப்பு)

நாளாந்தம் சுழற்சி முறையில் நாடுபூராகவும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் வார நாட்களில் நாளாந்தம் காலை அல்லது பிற்பகலில் 3 மணித்தியாலங்களும் இரவில் ஒரு மணித்தியாலமும் மின்சார தடை அமுல்படுத்தவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை வார இறுதி நாட்களில், சனிக்கிழமை 2 ¼ மணித்தியாலய மின்சாரத் தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு, ஞாயிறு தினங்களில் மின்சாரத் தடை அமுல்படுத்தப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீரேந்து பகுதிகளில் தற்போது நிலவும் வரட்சி காரணமாகவும், நாளாந்தம் மின் தேவை அதிகரித்து வருவதன் காரணமாகவும், கேள்விக்கு ஏற்ப மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்க முடியாதிருப்பதாலும் குறித்த முடிவுக்கு வந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ள நேர விபரங்கள் வருமாறு;

காலையில்/பிற்பகலில் (3 மணித்.)
மு.ப. 8.30 - மு.ப. 11.30 (அல்லது)
மு.ப. 11.30 - பி.ப. 2.30 (அல்லது)
பி.ப. 2.30 - பி.ப. 5.30

இரவில் (1 மணித்.)
பி.ப. 5.30 - பி.ப. 6.30 (அல்லது)
பி.ப. 6.30 - பி.ப. 7.30 (அல்லது)
பி.ப. 7.30 - பி.ப. 8.30 (அல்லது)
பி.ப. 8.30 - பி.ப. 9.30

சனிக்கிழமைகளில் (2 ¼ மணித்.)
மு.ப. 8.30 - மு.ப. 10.45 (அல்லது)
மு.ப. 10.45 - பி.ப. 1.00 (அல்லது)
பி.ப.1.00 - பி.ப. 3.15 (அல்லது)
பி.ப. 3.15 - பி.ப. 5.30

ஞாயிற்றுக்கிழமைகளில்
மின்வெட்டு அமுல்படுத்தப்படாது

1 comment:

Powered by Blogger.