Header Ads



சரிக்கமுல்ல சம்பவம், சிலரை தேடிவருவதாக பொலிசார் அறிவிப்பு - இன மோதல் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் அறிவிப்பு

(எம்.எப்.எம்.பஸீர்)

பாணந்துறை - சரிக்கமுல்ல - திக்கல பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து, அந்த பகுதியில் இன மோதல் ஒன்று ஏற்படும் அச்சம் ஏற்பட்டது. 

எனினும்  இதன்போது சிறப்பாக செயற்பட்ட பொலிஸார் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரை ஸ்தலத்துக்கு வரவழைத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதையடுத்தே தற்போது அங்கு சுமுகமான சூழல் ஒன்று நிலவுவுகின்றது.  

இந் நிலையில் பிரதேசத்தின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்ய தேவையான பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாகவும்,  துரதிஷ்டவசமான மோதல் சம்பவம் ஒன்றைத் தவிர வேறு எந்த சம்பவங்களும் அங்கு பதிவாகவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பாணந்துறை பகுதியில் நேற்றிரவு இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டிருந் நிலையில், பெரும்பான்மை இளைஞர் ஒருவரும் முஸ்லிம் இளைஞர்கள் இருவருமாக மொத்தமாக  மூவர் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.

இதையடுத்து அவர்கள் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்ததுடன் இந்த  மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலரை தேடி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.