Header Ads



ஒரு பாடத்திலும் சித்தியடையாத மாணவர்களும், உயர்கல்வியைத் தொடர முடியும் - கல்வி அமைச்சர்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்கள் தமக்கான தொழிற் கல்வியை தெரிவு செய்து கற்பதன் மூலம் உயர்கல்வியைத் தொடர முடியும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காசியவசம் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

தற்போது நாட்டில் 13 ஆண்டுகள் அனைத்து மாணவர்களும் தொடர்ச்சியாக கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்று கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

ஆகவே க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில்  ஒன்பது பாடங்களிலும் 9 ஏ சித்திகளைப் பெற்ற மாணவர்களைப் போன்று, ஒரு பாடத்திலும் சித்தியடையாத மாணவர்களும் தமக்கான தொழிற் கல்வியை தெரிவு செய்து கற்பதன் மூலம் உயர்கல்வியைத் தொடர முடியும். 

சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத அனைத்து மாணவர்களுக்கும் இவ்வாறான வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க எம்மால் முடிந்துள்ளது. 

எனவே அனைத்து மாணவர்களும் உயர் கல்வியை தடையின்றி தொடர்ந்து உயர்கல்வியையும் வெற்றிகரமாக நிறைவு செய்ய வேண்டுமென வாழ்த்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(எம்.மனோசித்ரா)

1 comment:

  1. Good இது மிகச் சிறந்த வரவேற்க்கத்தக்க விடயம் ஒரு மாணவனின் ஆளுமை என்பது 100 வீத சித்தியடைதலில் மட்டும் தங்கியிருக்கவில்லை
    அது வேறு ஆற்றலிலும் உள்ளது இதை கல்வி அமைச்சு காலம் தாழ்த்தி உணர்ந்தாலும் தற்போது இனி வரும் காலங்களில் இத்திட்டத்துக்கு
    தொடர்ந்து சிறப்பாக சேவை செய்ய வாழ்த்துக்கள்

    ReplyDelete

Powered by Blogger.