March 02, 2019

வன்ஷொட் நாயகன் ரஞ்சன், உலமாக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்

போதைவஸ்து கடத்தல், கொலை, கொள்ளை  உள்ளிட்ட பெரும்  குற்றச் செயல்களுடன் தொடர்பு பட்டிருந்த, பாதாள உலகின் மிக முக்கிய புள்ளியாக கருதப் பட்டு வந்த மாகந்துரே மதுஷ் குழுவினர் கடந்த சில வாரங்கள் முன்பு துபாய் நகரில் கைது செய்யப் பட்டதையும் அவர்களது கைது நடவடிக்கைகளை தொடர்ந்து அவர்களிடம்  பெறப்பட்டு வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு குறித்த குற்றச் செயல்களுடன் தொடர்பு பட்ட வேறு பலரும் இலங்கையிலும் துபாயிலுமாக  கைது செய்யப் பட்டு வருவதையும்  அறிவோம்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அவர்கள் பல்வேறு தரப்பினரையும் குறித்த குற்றச் செயலுடன் தொடர்பு படுத்தி அன்றாடம் ஒரு  பரபரப்பு செய்தியை  வெளியிட்டு வருவதானது  ஒரு சாராருக்கு  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி  வரும் நிலையில் மேலும் ஒரு சாரார் கடும் சினம் கொண்டெழுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. அமைச்சரின் குற்றச் சாட்டுகள் பற்றிய  உண்மைத் தன்மை எவ்வாறானவை? என்பது பற்றி விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன. உரியவர்கள் தமது கடமையை செய்வர்.  அது பற்றி இங்கு நான் கருத்து சொல்ல விரும்ப வில்லை.

பல்வேறு தரப்பினரையும் போதை வஸ்து குற்றச் செயலுடன்  தொடர்பு படுத்தி செய்தி வெளியிட்டு வரும் அமைச்சர் ராமநாயக்க அவர்கள் மஸ்ஜித்களில் கடமை புரியும் கண்ணியத்திற்குரிய இமாம்கள் மீதும் இரு வாரங்கள் முன்பு விரல் நீட்டி இருந்தது   உலமாக்கள் மத்தியிலும் முஸ்லிம் சமூகம் மத்தியிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இரு வாரங்கள் முன்பு  இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது போதை வஸ்துவுடன் தொடர்பு பட்ட பல்வேறு தகவல்களை அங்கு வழங்கி இருந்த அமைச்சரானவர் இடையே தனது அறிக்கையின் ஓர் இடத்தில் உலமாக்களை போதை வஸ்துவுடன் தொடர்பு படுத்தி அதிர்ச்சித் தகவலை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனை Daily Mirror ஆங்கில இணையத்தளம் 19/02/ 2019 அன்று தனது இணைய தளத்தில்  கீழ் காணுமாறு பதிவு செய்திருந்தது.  

 There are lebbes (Muslim clergymen) who consume cocaine. “They should be chased out from mosques”
(Yohan Perera)
அர்த்தம்: கொக்கைன் போதைப் பொருளை நுகரும் லெப்பேமார்களும் (முஸ்லிம் மதகுருமார்களும்) இருக்கின்றனர். பள்ளிவாசல்களில் இருந்து அவர்கள் துரத்தியடிக்கப் பட வேண்டும்.
யொஹான் பெரேரா. (செய்தியை பிரசுரித்திருந்தவரின் பெயர்) 
19/02/ 2019.

குறித்த அபாண்டத்தை சுமத்திய அமைச்சரானவர் தனது கூற்றை உறுதிப் படுத்த  ஒரு சந்தேகத்திற்குரிய தகவலையேனும் அவ்விடத்திலோ அல்லது அதன் பின்போ வெளியிட வில்லை. போதை வஸ்துவுடன் யாரேனும் ஒருவர் ஏதோ ஒரு வகையில்   தொடர்பு பட்டி ருந்தால் கூட சமூகம் அவ்வாறானவரை எவ்வளவு மட்டரகமான பார்வை கொண்டு நோக்குகின்றது? என்பது எல்லோருக்கும் நன்கு தெரியும். அவ்வாறான  நிலையில் முஸ்லிம்களால் மிகவும் மரியாதை செய்யப் படுகின்ற, பள்ளிவாசல்களில் புனித வணக்கமாகிய தொழுகையை முன்னின்று நடாத்தும், இதர பல வழிகாட்டல்களை முஸ்லிம் சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் செய்து வரும் கண்ணியமிக்க உலமாக்களை ஒரு சிறு ஆதாரம் கூட இன்றி போதைவஸ்து நுகர்வுடன்  சம்பந்தப் படுத்தி மீடியாக்கள் முன்பு அபாண்டத்தை சுமத்தியுள்ள அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மிகப் பெரும் தவறொன்றை புரிந்துள்ளார். அமைச்சரின் அபாண்டச் செய்தி மறுநாள் டெய்லி மிரர் பத்திரிகையில் பிரசுரிக்க பட்டிருக்கக் கூடும். குறித்த டெய்லி மிரர் இணையதள செய்தியை மாத்திரம் வாசிக்க கிடைத்ததே தவிர மறு தின டெய்லி மிரர் பத்திரிகையை கொள்வனவு செய்யவோ, வாசிக்கவோ கிடைக்க வில்லை.
ஆங்கில நாழிதல்களையும் இணையத்தளங்களையயுமே அதிகம் பார்வையிடும் கல்வி சார் சமூகம், உயர் அதிகாரிகள், வெளிநாடுகளின் தூதரக அதிகாரிகள், பல்வேறு நோக்கங்கள் நிமித்தம் இலங்கையில் தங்கி இருக்கும் வெளிநாட்டவர்கள், இணையத்தினூடே இலங்கையிலும் வெளிநாடுகளிலிருந்தும் பார்வையிடுவோர் என பெருந்தொகை மக்களை குறித்த கசப்பான, தவறான செய்தி போய் சேர்ந்திருக்கும் என்பதே யதார்த்தம். குறித்த செய்தியை இணையத்தளத்தில் பார்வையிட்ட மறு தினமே இதுபோன்றதொரு கட்டுரையை எழுத எண்ணி விட்டும் வேறு யாரேனும் முன் வந்து அமைச்சரின் பொடுபோக்குத்தனமான, பாரதூரமான செய்தி குறித்து கண்டனத்தை வெளியிட வேண்டும் என கடந்த 12 தினங்கள் எதிர்பார்த்திருந்தேன். எனினும் அவ்வாறான எதையும்  எங்கும் காணக் கிடைக்கவில்லை.

அமைச்சர் மிகப் பெரும்பாலும் கீழ் காணும் இரு காரணங்களில் ஒன்றிற்காகவே குறித்த தவறான செய்தியை வெளியிட்டிருக்கக் கூடும். 

முஸ்லிம்கள் பற்றிய (குறிப்பாக முஸ்லிம் மத தலைவர்கள் பற்றிய) தவறான செய்தியொன்றை கூறி தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்துதல் (இதற்கான சந்தப்பம் குறைவு என்றே நினைக்கின்றேன்) 

இலங்கையில் மிகப்பெரும்பாலான உலமாக்கள் தாடி, ஜுப்பா (தோப்), தொப்பி போன்ற ஆடை முறைமையை கொண்டுள்ள அதே வேலை உலமாக்கள் அல்லாத முஸ்லிம் ஆண்கள் பலரும் குறித்த ஆடை முறைமையை பேணி வருவது நாம்  அனைவரும் அறிந்ததே. மிகப் பெரும்பாலும் இங்கு தான் வன் ஷொட் அமைச்சர் ரன்ஜன் ராமநாயக்க கடுமையாக தடுமாறி, சறுக்கி விழுந்திருக்க கூடும். தொப்பி தாடி, அல்லது தொப்பி தாடி, ஜுப்பா அணிந்த அனைவரையும் உலமாக்கள் என அமைச்சர் கணக்கு பண்ணி இருப்பார்.

ஆம் இங்கு கேள்வி யாதெனில் குறித்த தாடி, ஜுப்பா (தோப்), தொப்பி போன்ற ஆடை முறைமையை கொண்டுள்ள  அனைவரும் உலமாக்களா ???

தப்லீக் உழைப்பில் ஈடுபாடு கொண்ட மக்களில் கணிசமோரும் சில தவ்ஹீத், தரீக்கா அமைப்புக்கள், ஏனைய சில தஹ்வா அமைப்புக்கள் போன்றவற்றில் ஈடுபாடு கொண்ட சிலரும் தாடி, ஜுப்பா (தோப்), தொப்பி போன்ற ஆடை முறைமையை பேணுகின்றனர்.
ஷிர்க்கில் மூழ்கிப் போய் பலாங்கொட ஜெய்லானியில் இருந்து வெளியேறி நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம் ஊர்களெல்லாம் சுற்றித்திருந்து, இஸ்லாமிய கீதங்களை இசைத்து, யாசித்து வரும் bபாவாக்கள் அல்லது பக்கீர்கள் எனப்படுவோரும் தாடி, தொப்பி, தலைப்பாகை அணிந்தே ஊர் ஊராய் யாசித்து வந்தனர் (தற்காலத்தில் அவர்களது நடமாட்டங்கள்  சற்று  குறைந்திருந்தாலும் இன்றும் அவ்வாறான bபாவாக்கள் எமது சமூகத்திற்குள் அவ்வப்போது தோன்றி மறையவே செய்கின்றனர்) குறித்த bபாவாக்களில் ஒரு சாரார் கடந்த காலங்களில் கஞ்சா உள்ளட்ட போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வந்ததும் பலபோது பிடிபட்டதும் யாவரும் அறிந்ததே.

தாடி தொப்பி, ஜுப்பா உள்ளிட்ட தோற்றங்களை தம்மில் ஏற்படுத்திக் கொண்டால் முஸ்லிம் சமூகத்தை இலகுவில் நம்பவைத்து ஏமாற்று வேலைகளை செய்யலாம் என்ற தப்பான நோக்கத்திற்காகவும் ஒரு கூட்டம் அவற்றை ஆடை அணிகலன்களாக பயன் படுத்தி வருகின்றது.

பேஷனுக்காக  தாடி, ஜுப்பா, தொப்பி போன்றவற்றுடன் வலம் வரும்  வாலிப, நடுத்தர வயதினர் பலரும் இருக்கவே செய்கின்றனர். 

ஆக, குறித்த ஆடை, தோற்ற முறைமையை கொண்டிருப்பவர்களில் உலமாக்கள் யாவர்?  மஸ்ஜித்களில் கடமை புரியும் இமாம்கள் யாவர்? ஜமாஅத்துக்கள், இயக்கங்களோடு சம்பந்தப்பட்டவர்கள் யாவர்? ஜெய்லானி bபாவாக்கள் யாவர்?  திருட்டு, ஏமாற்று, சட்டவிரோத செயல்களுக்காக தாடி, தொப்பியை பயன்படுத்துவோர் யாவர்? பேஷனுக்காக அணிவோர் யாவர்? என்பதை சரியாக அடையாளம் கண்டுகொள்ள முடியாது போன அமைச்சர் ரஞ்சன் ராம நாயக்க தடுமாறிப் போய்  ஜுப்பா தாடி தொப்பியுடன் அல்லது தாடி, தொப்பியுடன் காட்சியளிக்கின்ற அனைவரையுமே  மஸ்ஜித்களில் இமாம்களாக கடமை புரியும் உலமாக்கள் என கருதி இருக்கலாம். அத்தோடு  குறித்த தோற்றத்தை பயன்படுத்தி  போதை பொருளுடன் தொடர்பு பட்ட குற்றச் செயலில் ஈடுபட்ட  யாரேனும் அமைச்சரின் கண்ணில் எப்போதாவது பட்டிருக்கவும் கூடும்.  


தவறான கண்ணோட்டத்தின் காரணமாகவே குறிப்பிட்ட பழியை தான் சுமத்தி இருப்பதாக அவர் உணர்ந்து கொள்வாராக இருந்தாலும் “தவறுதலாக சொல்லி விட்டேன்” என்று மட்டும்  கூறி விட்டு அமைச்சர் தப்பிக்க முடியாது. ஏனெனில் இவர் மீடியா வழியாக உலமாக்களை கண்மூடித்தனமாக விமரசுரித்திருப்பது கொக்கெய்ன் எனும் மிக அபாயகரமான போதை வஸ்துவுடனாகும். இவரது குறித்த குற்றச்சாட்டு பெரும்பான்மை இனவாத மீடியாக்களுக்கு பெரும் தீனியாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அமைச்சர் ரஞ்சன் ராம நாயக்க  படுதூரான இச் செய்தியை எவ்வித தெளிவுகளையும் வழங்காது குறிப்பிட்டிருந்தது மிகவும் வேதனைக்குரியதாகும்.

 சமூகத்தில் இருந்து உலமாக்களை தனிமைப்படுத்துவதினூடாக சில நோக்கங்களை அடைந்து கொள்ளலாம் என எண்ணுகின்ற சில முஸ்லிம்களும் ஒரு சில முஸ்லிம் அமைப்புக்களும் உலமாக்கள் மீது சேறு பூசும் இதுபோன்ற ஏதேனும்  வேலைகளை அவ்வப்போது செய்து வருகின்றனர். அப்படியானவர்கள் சமூக வலைத்தளங்களை  பயன் படுத்தியே உலமாக்கள் பற்றிய தப்பான எண்ணங்களை மக்கள் மனதில் விதைக்கின்றனர். ஜுப்பா, தாடி, நிகாப் போன்றவை அவர்களுக்கு மிகவும் எலர்ஜியாகவே தென்படுகின்றது.

முடிவாக:

போதை பொருள் சார்ந்த கைது நடவடிக்கைகளில் பெயர்தாங்கி முஸ்லிம்கள் பலரது பெயர்கள் அதிகம்  பலமாக அடிபட்டுக் கொண்டிருக்கும் இச் சந்தர்ப்பத்தில் நாட்டு முஸ்லிம்கள் அனைவரும் மிகவும் விழிப்பாக செயற்பட வேண்டும். பொது இடங்களில் நாம் மிகவும் விழிப்பாக செயற்பட வேண்டி இருப்பதுடன் எமது கைப்பைகள், பொதிகள் போன்றவற்றை பொது இடங்களில் எம்முடனேயே வைத்திருப்பது சிறந்தது. உதவி செய்கின்றோம் என்ற எண்ணத்தில் பிறர் பொதிகளை எமது பொறுப்பில் எடுப்பதில் மிகவும் அதிக அவதானம் தேவை. பள்ளிவாசல்கள், முஸ்லிம் வியாபாரஸ்தலங்கள், முஸ்லிங்களுக்கு சொந்தமான பொது இடங்கள் போன்றவற்றில் விஷமிகளும் இனவாதக் குழுக்களும் பொதிகளை கொண்டு போய் வைத்து விட்டு முஸ்லிங்களை ஆயுத பயங்கரவாதத்துடன், போதை வஸ்துக்களுடன் தொடர்பு படுத்தும் திட்டங்கள் கூட தீட்டப் பட சாத்தியம் நிறைந்த காலத்தில் வாழ்கின்றோம்.

 அள்ளாஹ்வின் அச்சத்தை எம்மில் ஏற்படுத்திக் கொள்வதும் எமது பிள்ளைகளின் உள்ளங்களில் அவன் பற்றிய அச்ச உணர்வை உண்டுபண்ணுவதும் எம்மீதுள்ள தலையாயக் கடமைகளில் ஒன்றாகும்.

அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அவர்களின் மிகவும் பொறுப்பற்ற, பொடுபோக்கான குறித்த செய்திக்கான விளக்கம் யாது, ஆதரங்கள் யாவை என அவரிடம் வினவுவதும் தகுந்த ஆதாரத்தை வழங்க அவரால் முடியாது போகும் சந்தர்ப்பத்தில் அவர் ஏற்கனவே உலமாக்களை  குற்றம் சாட்டியிருந்தது போன்றதொரு  ஊடக சந்திப்பின் போது  உலமாக்களிடம்  பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என அவரை நிர்ப்பந்திப்பதும் எமது சமூகத்தின் கடமையாகும். குறிப்பாக பள்ளிவாசல்கள் இமாம்கள் நலன்புரிச் சங்கம் இதில் கூடுதல் கவனம் செலுத்தல் வேண்டும். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் கலாச்சார அமைச்சு ஆகியவையும் இது விடையத்தில் கவனம் செலுத்துவது பொருத்தமாக அமையலாம்.

குறிப்பு:
இரு வாரங்கள் முன்பு டெய்லி மிரர் ஆங்கில இணையத்தளத்தில் பிரசுரமாகி இருந்த குறித்த முழு கட்டுரையையும் இங்கு இணைத்துள்ளேன்.

அஷ் ஷெய்க் ஷfபீக் zஸுபைர் (bபஹ்ஜி)

8 கருத்துரைகள்:

Who is Ulama in SL? In general, who got approximately 8 years of education in Shariyyah. These Ulama should be able to speak Arabic Language well, able to give clear explanations in Shariyyah. Ranjan used the term Lebbe. Who are they? They got limited knowledge in Theen, usually performed prayers in villages or small mosques where the mosque cannot pay salary to Maulavis. Unfortunately, some Lebbes used Ghanja- we know that. So, Ranjan's point positively, get rid of these Lebbes from the mosques rather jumping around & get mad. Also, write this article in English, so that Even Ranjan can read as well.

yes brother .. I am Agree with you ..

Brother Shahul Cader,
As per I know there isn’t any trustees of any masaajid in Srilanka they have appointed a lebbe for imaamath. So all the masaajid have proper ulamas who completed their Sharia studies but you have dropped here that unfortunately some Lebbes are using the Ghana and you know that. I do know whom you mention as Lebbe by your words but I can say that the ulamas who are working as Imaams and leading the salaah in Masaajid, never used that. I know one more think that Minister Ranjan Ramanayake dousn’t know who is proper Ulama and who is Lebbe because I heard several time that he used the Word Lebbe normally for all the Ulamas. Please understand before commenting. JazakAllah.
As Muslims, it is our duty to Non-Muslims to make them understand our Theen. It is a Farl for Ulamas. Rather jumping & accusing, do the Thawa to Non Muslims in the proper way as Rasool did. We still call many people who conduct prayers as Lebbes. If some of them use drugs, get rid of them, rather personalizing as it is for all Ulamaas. In general, May Allah protect all our Muslims from drug addictions& be an example to Non Muslims- That is all Sheigh.

@ Mowlavi Shafiq Zubair (Bahji)

Why you have brought your own masala of "Shirk" to this unless otherwise a good thing to read.

Towards paradise you r right.sahul cater mind your comments

Post a comment