Header Ads



கொடிய தீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்த 'வரலாற்று பகை'யை வெளிப்படுத்தும் வார்த்தைகள்


நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச் நகரில் உள்ள மஸ்ஜித் உள் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தி 5 வயது சிறுவன், பெண்கள் உட்பட, 50 க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்களை கொன்ற தீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகள்,  தீவிரவாதிகளின் வரலாற்று கோபம், வக்கிரம், பகையை வெளிப்படுத்துக்கின்றது.

#turkofagos என்ற கிரேக்க மொழி வார்த்தைக்கு "துருக்கி கொலைக்காரர்கள்" என பொருள்

-#Miloš_Obilić- 1389ஆம் ஆண்டு உதுமானிய சுல்தான் முராத்-1  அவர்களை படுகொலை செய்த செர்பிய படைதளபதியின் பெயர்

-#John_Hunyadi - காண்ஸ்டாண்டிநோபுள் வெற்றிக்கு பின் 1456ம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தில் சுல்தான் மஹ்மூத் || வின் படைக்கு எதிராக போராடி வெற்றிக்கொண்ட ஹங்கேரியின் இராணுவ தளபதி பெயர்

-#Vienna_1683-  உதுமானிய படை வியன்னா போரில் தோல்வியுற்ற ஆண்டு

  இவை எல்லாம் உதுமானிய கிலாஃபத் திற்கு எதிராக கிருஸ்துவ உலகம் பெற்ற வெற்றியின் குறியீடுகள்

   இவைமட்டுமல்லாமல், 'Refugees welcome to Hell' என அகதிகளுக்கு எதிரான வெறுப்பு வாசகங்களும் துப்பாக்கிகளில் குறியிடாக எழுதப்பட்டுள்ளது...

#இதுபுத்திநலம்இல்லாத ஒரு பைத்தியக்காரன் நடத்திய தாக்குதல் அல்ல, முஸ்லிம்களின் மீது வரலாற்று ரீதியாக பகை ஊட்டப்பட்ட இஸ்லாமிய வெறுப்பு ஆலையில் உருவான #ஃபாஸிஸதீவிரவாதிகளின் திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல்...

#வரலாற்றை நாம் மறந்து விட்டோம், ஆனால் அவர்கள் மறக்கவில்லை...

#பகை_காத்திருக்கிறது

#Christchurch #ChristchurchMosqueAttack


No comments

Powered by Blogger.