Header Ads



அலரி மாளிகைக்கு, ஜெனரேட்டர்கள் ஊடாக மின்சாரம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக மின்சார உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு தழுவிய ரீதியில் மின்விநியோக தடை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த நெருக்கடி நிலைக்கு தீர்வு கிடைக்கும் வரையில் அரச அலுவலகங்களில் சிக்கனமாக மின்சாரம் பயன்படுத்துமான பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தியாவசிய சேவைக்கு மாத்திரம் மின்சாரத்தை பயன்படுத்துமாறும் முடிந்தளவு தேசிய மின்சார கட்டமைப்பில் மின்சாரம் பெறுவதனை தற்காலிகமாக நிறுத்துமாறும், அரச நிறுவனங்களில் உள்ள ஜெனரேட்டர்களை பயன்படுத்துமதாறு பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மின்சார நெருக்கடி நிறைவடையும் வரை அலரி மாளிகைக்கும் தேசிய கட்டமைப்பில் மின்சாரம் பெறாமல் ஜெனரேட்டர்கள் ஊடாக மின்சாரம் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.

மின்சார பயன்பாட்டை குறைத்து கொள்ளுமாறு அமைச்சர் ரவி கருணாநாயக்க விடுத்த கோரிக்கமைய, பிரதமர் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

1 comment:

  1. Send this Thief Ravi Home everything will come back to Normal...
    Then Rain will start raining....

    ReplyDelete

Powered by Blogger.