March 30, 2019

சத்துரவின் பார்வையில் அன்றைய முஸ்லிம்களும், இன்றைய முஸ்லிம்களும்...!!


தொப்பி போடுவதில் தொடங்கியது தெரண ஊடகவியலாளர் சதுர அல்விஸின் கேள்வி....

இஸ்லாத்தை பற்றி இஸ்லாத்திற்கு வெளியே உள்ள மக்களிடம் ஏகப்பட்ட கேள்விகள் இருக்கின்றன.

ஒரு சாரார் உண்மையாகவே இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்வதற்காக அந்த கேள்விகளை சேமித்து வைத்திருக்கிறார்கள்.

இன்னொரு சாரார் இனவாத, மதவாத கண்ணோட்டங்களோடு இஸ்லாத்தின் மீதான விமர்சன ரீதியான கேள்விகளை எப்போதும் ஏவிக்கொண்டேயிருக்கிறார்கள்.

இலங்கையில் தெரண தொலைக்காட்சியின் ஊடகவியலாளரான சதுர அல்விஸ் இனத்துவ ரீதியான போக்கினை கொண்டவர் என்ற பார்வை உண்டு. 


இருந்த போதிலும் ஊடகவியலாளராக அவர் இஸ்லாம் தொடர்பிலும் இலங்கை முஸ்லிம்கள் பற்றியும் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் அஷ்ஷெய்க் அம்ஹர் மெளலவி அவர்கள் பதிலளித்த விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

‘நான் முஸ்லிம்கள் வாழும் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்தவன், அப்போதைய முஸ்லிம் தாய்மார் என்னை நன்றாக அவர்களது வீடுகளுக்கு அழைத்து உபசரிப்பார்கள், முஸ்லிம் நண்பர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். நோன்பு காலத்தில் எனது வீட்டிற்கு கஞ்சி அனுப்புவார்கள்.... 

ஆனால் இப்போதைய முஸ்லிம் பெண்களின் உடையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கறுப்பு நிற ஆடைகளை அணிகின்றார்கள். முகத்தை மூடிச்செல்கிறார்கள்...இந்த மாற்றம் எதனால் வந்தது ?’என்று எழுந்த கேள்வி முதல் வில்பத்து காடழிப்பு, ஜும்ஆ தினங்களில் ஹெல்மட் போடாமல் மோட்டார் சைக்கிள் ஓடுதல், ரோட்டை பிடித்து சட்டவிரோத கட்டடங்கள் கட்டுதல், இனத்துவ அரசியல், மாடறுத்தல், அதிகம் பள்ளிவாயல்களை கட்டுதல்

 என பல்வேறு தளங்களில் நகர்ந்து ஈறாக ஏராளமான பிள்ளைகளை பெறுதல் வரை தனக்குள் இருந்த ஒட்டு மொத்த கேள்விகளையும் சதுர மஹத்மயா கொட்டி முடித்தார்.

இறைவனது அருளால் “சதுர மஹத்மயா” என்ற கனிவான விழிப்போடு மிக்க சாதுர்யமாக அம்ஹர் மெளலவி வழங்கிய தெளிவான பதில்கள் சதுரவை பல இடங்களில் உறையவைத்தது ( freezed).

அல்ஹம்துலில்லாஹ்.

எல்லாம் வல்ல இறைவன் ஹஸ்ரத் அம்ஹரின் அறிவில் மென்மேலும் பரக்கத் செய்யட்டும்.

தேகாரோக்கியமான வாழ்வையும் நீண்ட ஆயுளையும் அவருக்கு அருளட்டும்.

இந்த நேர்காணல் கண்டிப்பாக தமிழில் ஒலிவடிவம் கொடுக்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

Mujeeb Ibrahim

13 கருத்துரைகள்:

மனங்களை அறிந்தவன் அல்லாஹ், Chathura வின் கேள்விகள் இவ்வாறான ஒரு நிகழ்ச்சியில் கேட்கப்பட வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கின்றோம், அவரை என்னால் ஒரு இனவாதியாக பார்க்க முடியவில்லை, அதிகமான பெரும்பான்மை மக்களின் மனதில் அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் கேள்விகள் அவை, chathura விற்கு இவரை விட ஆளுமை குறைந்த ஒருவரை அழைத்து வந்திருக்க முடியும், அதை தவிர்த்து சரியான ஒருவரை அழைத்து வந்து, பதிளுக்கான நேரங்களை முறையாக வழங்கினார், இதற்கு வாயடைத்திருந்தார் என்பதை விட ஊடக தர்மத்தை பேனினார் என்பதே மேல். இம்மாதிரியான கேள்விகளை பொது அரங்கில் கொடுத்த chathura வை பாராட்டாமல் இருக்க முடியாது, அத்துடன் அதிகமான பெரும்பான்மை சகோதரர்கள் இடத்தில் இந்நிகழ்ச்சி எம்மீதான பார்வையில் ஒரு மாற்றத்தை ஏட்படுத்தி இருக்கின்றதென்பதை பின்னூட்டங்கள் வழியாக அறிய முடிகிறது. இனவாதத்தை தொழிலாக செய்பவர்களுக்கு எவ்வளவு விளக்கங்களை கொடுத்தாலும், அவர்கள் மாறப் போவதில்லை.

Hats off to Amhar Moulavi and Chathura

தமிழில் கேட்க மிகவும் ஊவலாய் உள்ளோம்

Alhamdulillah! Alhamdulillah! AlHamdulillah May Allah Almighty bless Hazarath Hamhar and his family (Ameen). I watched this program it was some stunning answers from Hazarah

Please tell us time and date of that programme

மிகவும் பெருமைக்கும் பாராட்டுக்கும் உரிய விடயம். அவ்விடத்தில் நான் இருந்தால் சகோதரர் சதுர அவர்கள் தான் கேட்ட கேள்விகளை விட இன்னும் அதிகமாக கேட்டிருப்பேன். கேட்டதால்தான் பதில்
வந்தது. சதுர இன்னும் கேட்டிருந்தால் நல்லதென்பதே எனது கருத்து! கெளரவ மௌலவி அவர்களின் ஆயுளிலும், அறிவிலும், ஆரோக்கியத்திலும் அல்லாஹ் பரகத் செய்வானாக.

மிகவும் பெருமைக்கும் பாராட்டுக்கும் உரிய விடயம். அவ்விடத்தில் நான் இருந்தால் சகோதரர் சதுர அவர்கள் தான் கேட்ட கேள்விகளை விட இன்னும் அதிகமாக கேட்டிருப்பேன். கேட்டதால்தான் பதில்
வந்தது. சதுர இன்னும் கேட்டிருந்தால் நல்லதென்பதே எனது கருத்து! கெளரவ மௌலவி அவர்களின் ஆயுளிலும், அறிவிலும், ஆரோக்கியத்திலும் அல்லாஹ் பரகத் செய்வானாக.

This should not be looked at as questions raised by Chathura in a communal mindset. Rather, these are the embedded questions in thousands of Buddhist brothers' and sisters' minds in Sri Lanka. We have to appreciate Chathura and Derana for bringing our Ulama who answered them logically and beautifully! Hope the community leaders could make use of Amhar Moualvi to promote peace and coexistence in Sri Lanka.

Chatura ஒரு இனவாதியே அவனின் ஒவ்வொரு கருத்தும் Amhar சகோதரை மட்டம்தட்ட முன்வைத்த கேள்விகளாகும் ஆனால் அந்த சகோதரர் இஸ்லாமிய மார்க்க அறிவினுடாக மிகவும் தெளிவான பதிலை கொடுத்து கேள்வி கேட்டவனேயே தடுமாற வைத்தது அது தான் உண்மை.

மேல ஒரு சகோதரர் Chatura அவரை தவிர வேறு ஒரு ஆளுமை குறைத்த ஒரு நபரை அழைத்து வந்து கேள்விகளை கேட்டு இருப்பாரு என்று தெரிவித்து இருந்தார் ஆனால் அவர்களின் நோக்கமே நல்ல அறிவுள்ள படித்த மனிதரை தாழ்த்தி அடிப்படிய வைப்பதேயாகும்.

நான் முஸ்லிம்கள் வாழும் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்தவன் ...... என்ற கேள்விக்கு இலகுவான, லேசாக பதில் கொடுப்பதாக இருந்தால் இப்படியொரு பதிலை எமக்கு சொல்ல முடியும் " நீங்கள் பிறந்த காலத்தில் வன்மம்,காமப்பார்வை இல்லாதிருந்து அது மட்டுமல்ல தரம் குறைந்த மீடியாக்கள் இருக்கவில்லை, விரசத்தை ஏற்படுத்தும் விதமான விடயங்கள் இருக்கவில்லை, பெண்களை போகப்பொருளாக பாவிக்கும் பழக்கம் மிக அரிதாக இருந்தது, ஆனால் இன்று 5(ஐந்து)வயது சிறுமியை காமக்கண்ணோடு பார்க்கும் பலர் இருக்கும் காலம் இது, அத்தோடு பிள்ளைகள் முதல் வயதான பெண்கள் வரை கவர்ச்சியான உடைகளை அணிவித்து,அணியும் காலம் இது ஆகவே பெண்களுக்கு பாதுகாப்பு இஸ்லாம் கூறும் வழியில் தேடுவது சிறந்தது,இன்று தாய்மார்கள் பாசமாக அழைத்தாலும் பாலான நோக்கில் அழைத்ததாக என்னி பாழாக்கி விடுவார்கள் ஆகையால் இஸ்லாம் கூறும் கட்டுப்பாடுகளுக்குள் பெண்கள் சென்று தம்மை பாதுகாத்துக்கொள்வது மிக சிறந்ததாக இருக்கும் என்பதை பெண்கள் சொல்லும் காலம் மிக அருகாமையில் இருக்கிறது என்பதை அவருக்கும் ஏனையவர்களுக்கும் சொல்வோம்.

Every Moulavi Should intelligent not paased only grade 7 not in the knowledge with Kithab he should need the great knowledge Alhamdulillah Allah is Great we got a very intelligent Moulavi May Allah Bless him, Ya Allah give him more more greatest knowledge ...We don't need a knife or Sword or Gun to kill our enemy Knowledge is Power!

அன்பின் சகோதரர்களுக்கு
ஊடகவியலாளர் சதுரவை பலர் இனவாதியாகக் காட்ட முயற்சிப்பது கண்டு ஆச்சரியப் படுகிறேன்.
ஊடகவியலாளர் சதுர கேட்ட கேள்விகள் அனைத்தும் சிங்கள சமூகத்தில் தீவிரமாக கேட்கப்படும் கேள்விகள். அந்த கேள்விகள் கேட்கப்பட்டு விடையளிக்கப்பட வேண்டியவை.
என்பது எனது தாழ்மையான கருத்து

Post a Comment