March 18, 2019

நியூசிலாந்தில் ஷஹாதத் மூலம் உலகறிய செய்யப்பட்ட உண்மைகள் - இஸ்லாமோபோபிய மீது விழுந்த அடி


நிச்சயமாக ஷஹீதாக்கப் பட்ட உறவுகள் எல்லாம் வல்ல அல்லாஹ்வினால் ஒரு உயரிய பணிக்காக தெரிவு செய்யப் பட்டவர்கள் அவர்களது ஷாஹதத் இன்று சர்வதேச இஸ்லாமோபோபிய பயங்கரவாத வலைப்பின்னலை ஆட்டங்காணச் செய்துள்ளது, மதங்கள் தாண்டிய மனிதாபிமானம் அதனை இலக்கு வைத்து தாக்குகின்றது, சாந்திமார்க்கம் இஸ்லாத்தின் செய்தி உலகெங்கும் உயிர்பிக்கப் படுகிறது.

இஸ்லாமியர்களின் வணக்கஸ்தலங்களில் ஒளிவு மறைவுகிடையாது, பாதுகாப்பு ஏற்பாடுகள் கிடையாது, அவை சமாதானத்தின் சகவாழ்வின் ஜீவ காருண்யத்தின் மத்திய நிலையங்கள், வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவோர் நிராயுதபாணிகள் அங்கு அச்சமின்றி எவரும் உட்பிரவேசிக்கலாம் என பலநூறு செய்திகளை இந்த அர்பணிப்புகள் உலகறியச் செய்துள்ளன.

இன்ஷா அல்லாஹ், அந்த ஷுஹதாக்களின் அர்பணிப்பு இன்னும் ஆயிரமாயிரம் இதயங்களில் சத்தியத்தின் தீபத்தை ஏற்றிவைக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை, அவர்களது தியாகம் ஒவ்வொரு உண்மை விசுவாசியின் வாழ்விலும் அவன்/ள் இருக்கின்ற இடத்தில் பாரிய மாற்றங்களை நிச்சயமாக ஏற்படுத்தும்!

தீய சக்திகள் உங்கள் மீது காழ்புணர்வை கக்குகின்ற வேகத்திலும் பார்க்க அன்பையும் காருண்யத்தையும் மனித குலத்தின் மீது காட்டுங்கள், மனித குலத்திற்கான காருண்யத் தூது உலகெங்கும் வியாபிப்பது கண்டே ஷைத்தானிய பட்டாலங்கள் அமைதியிழந்திருக்கின்றன!

2

 இஸ்லாமோபோபிய வலைப்பின்னல் மீது விழுந்த பாரிய தாக்குதல்!


நியூசிலாந்தில் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள நூர் மஸ்ஜித் மற்றும் லைன்வுட் மஸ்ஜித் எனப்படும் இரு பள்ளிவாயல்களில் ஜும்ஆ தொழுகைக்காக இருந்தவர்கள் மீது மர்ம நபர்கள் மேற்கொண்ட காட்டுமிராண்டித் தனமான உலக முஸ்லிம்களை மாத்திரமன்றி மனச்சாட்சியும் மனித நேயமும் கொண்ட முழு உலக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு சர்வதேச இஸ்லாமோபோபிய பயங்கரவாத வலைப்பின்னலின் முகத்திரையை கிழித்தெறிந்திருக்கிறது.

நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் அரசு அன்றைய தினத்தை வரலாற்றில் ஒரு கரிநாளாக பர்கடனம் செய்து தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டு விடுத்த அறிக்கைகள் நேரில் சென்று தெரிவித்த அனுதாபங்கள் மாத்திரமன்றி நியுசிலாந்திலும் மேற்கு கிழக்கு என உலகின் சகல நாடுகளிலும் இருந்து வெளியிடப்பட்ட கண்டனங்களும் குறிப்பாக மஸ்ஜிதுகளில் முஸ்லிம் அல்லாதவர்கள் அணிதிரண்டு வைத்த மலர் வலையங்களும் இஸ்லாமோபோபிய பயங்கரவாத வலைப்பின்னலின் போலிப் பிரச்சாரங்களை தவிடு பொடியாக்கி இருக்கின்றன.

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

0 கருத்துரைகள்:

Post a Comment