Header Ads



ஏறாவூர் வீதியில் வீடொன்று தீக்கிரை (படங்கள்)

இதனை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த மட்டக்களப்பு மாநகரசபைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மட்டக்களப்பு ஏறாவூர் நகர் பகுதியில் உள்ள முனையவளவு வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஏறாவூர் நகர சபைக்கு கிட்டிய தூரத்திலேயே இவ் வீடு இருக்கிறது.

இன்று மாலை 06.55 மணியளவில் இவ் வீட்டினுல் தீ பரவுவதை அவதானித்த அயலவர்களில் ஒருவரான எனது மருமகன் மாஜீத், என்னோடு தொடர்பு கொண்டு விடயத்தை தெரிவித்ததும்,

முதலில் ஏறாவூர் பொலிசுக்கு தகவலை தெரிவித்துவிட்டு, CEB க்கும் அறிவித்துவிட்டு, நகரசபை தவிசாளர். செயலாளர் ஆகியோரின் தொடர்பு கிடைக்காததால் நகரசபை தொழிலாளி சகோதரர் இனனூனிடம் விடயத்தை தெரிவித்துவிட்டு, மட்டக்களப்பு தீ அணைக்கும் பிரிவுக்கும் தகவலை தெரிவித்துவிட்டு சம்பவ இடத்துக்கு வந்தேன்.

தகவல் கிடைத்தவுடன் மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் பிரிவினர் விரைந்து வந்து தீயினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்கள்.

இந்த தீவிபத்து காரணமாக வீட்டில் உள்ள பொருட்கள் முற்றாக தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இவ் வீடானது தம்பாளையில் திருமணம் முடித்துள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜுனைத் என்பவருடையதாகும்.

இவ் வீட்டை அக்பர் என்பவருக்கு கடந்த 15 வருடமாக வாடகைக்கு  கொடுத்திருக்கிறார்.

சகோதரர் அக்பர் மற்றும் மனைவி பிள்ளைகளுன் நேற்றிரவு தம்பாளைக்கு சென்றிருந்ததால் வீட்டில் யாரும் இருக்கவில்லை.

இதனால் உயிர்ச்சேதங்கள் இல்லை

MSM நஸீர்.



No comments

Powered by Blogger.