Header Ads



கல்லொலுவ நிழாமிய்யாஹ் அரபுக் கல்லூரியின் ஒன்றுகூடலும், கௌரவிப்பு நிகழ்வும்


கடந்த 24. 03.2019ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மினுவங்கொட நிழாமிய்யாஹ் அரபுக் கல்லூரியில் இதுவரை அல்-ஹாபிழ் மற்றும் அல்-ஆலிம் சான்றிதல் பெற்ற அனைவருக்குமான மாபெரும் ஒன்றுகூடல் காலை 08.30 மணி முதல மாலை 03.00 மணி வரை நடைப்பெற்றது.

1985 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி மிக சிறப்பாக அடைப்பெற்று வருகின்றது. இது வரை 127 ஆலிம்களையும்

103 ஹாபிழ்களையும் உருவாக்கியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

குறித்த நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கண்டி மாவட்ட தலைவரும்>  ஜம்இய்யாவின் பிரச்சாரக் குழு செயலாளருமான அஷ்ஷெய்க் உமர்தீன் (ரஹ்மானி) அவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொண்டார்கள்.

அவர்கள் தமது உரையுல் உலமாக்களின் சிறப்பும் கடமைகளும் எனும் தலைப்பில் மிகவும் சிறந்த ஒரு உபதேசத்தை செய்தார்கள்.  அல்லாஹ் அவருக்கு நல்லருள் பாளிப்பானாக!

35வருட காலமாக நிழாமிய்யாவின் தலைவராக> கல்லூரியின் முன்னேற்றத்திற்காக தமது காணியை வக்பு செய்து இரவு பகலாக கல்லூரியின் நலனுக்காக பாடுபடும் அல்-ஹாஜ் ஏ. எச். எம் முனாஸ் அவர்களை நிழாமிய்யாவின் பழைய மாணவர் சங்கம் சார்பில் கல்லுரின் அதிபர் அஷ்ஷேக் நிஜாபுத் தீன் (பஹ்ஜி) அவர்கள் பொன்னாடை அணிவித்தும்> உபஅதிபர் அஷ்ஷெய்க் ஜஸ்மின் (தீனி) அவர்கள் ஞாபக சின்னம்  வழங்கியும்  கௌரவித்தார்கள்.

மேலும் இந்நிகழ்விற்கு நிழாமிய்யாஹ் ஆரம்பிக்கப்பட்ட தருனம் முதல் வகுப்புக்காக இணைந்து கொண்ட மாணவர்களும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படனர். அதில் ஐவர் கலந்து கொண்டு தமது கல்லூரின் பழை அனுபவங்கள் குறித்தும் சபையோருக்கு முன்வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தகக்கது.

முஹம்மத் (நிழாமி)


1 comment:

Powered by Blogger.