Header Ads



இந்திய இராணுவம், செய்யும் அக்கிரமம்...!


ரெண்டு நாளா ஜெனீவா ஒப்பந்தம் பத்தி நம்ம ஊர்ல நிறைய பேசுறானுங்க.
பாகிஸ்தான் அபிநந்தனை சித்ரவதை செய்யவில்லை என்ற செய்தி வந்த போது அது ஜெனீவா ஒப்பந்தம் என்றார்கள்.
இப்போது விடுதலை செய்வதாக சொன்ன பின்பும், ஜெனீவா ஒப்பந்தத்தின்படி விட்டுதான் ஆக வேண்டும் என்கிறார்கள்.
சரி பாகிஸ்தான் ஜெனீவா ஒப்பந்தத்தினை மதித்து விட்டுவிட்டது. இப்போது நம் அரசு ஜெனீவா மனித உரிமை ஒப்பந்தத்தினை எந்த அளவுக்கு பின்பற்றியது என பார்ப்போமா?
இந்த படத்தில் இருப்பவர் பெயர் பரூக் அகமது தார். இவர் இந்தியாவால் நிர்வகிக்கப்படும் காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் தீவிரவாதியோ, பிரவினை கேட்பவரோ அல்ல.
கடந்த 2017 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்ரீநகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வாக்களித்து விட்டு தனது உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கு ஒன்றுக்கு செல்கிறார்.
அப்போது ஏராளமான காசுமீர் மக்கள் அந்த தேர்தலை புறக்கணித்திருந்தார்கள். இந்தியப் படையினர் நடத்திய பல்வேறு அடக்குமுறைகளால் அவர்கள் இந்தியப் படையினரை ஊருக்குள் அனுமதிக்கவில்லை.
ஊருக்குள் போனால் கல்லெறிவார்கள் என்பதால் அங்கு வரும் பரூக் அகமது தாரைப் பிடித்து கடுமையாக தாக்கி, அவரை இந்தியப் படையினரின் ஜீப்பின் முன்னே கட்டுவதற்கு ஆணையிடுகிறார் இந்திய அதிகாரி ஒருவர்.
அந்த மனிதனை மனிதக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு, ஜீப்பின் முன்புறமாக கட்டிக் கொண்டு காசூமீரின் கிராமங்களுக்குள் அதிகாரத்துடன் வலம் வந்தார்கள் இந்திய படையினர். எவன் கல்லெறிந்தாலும் உங்களுக்கும் அதே நிலைதான் என ஒலிப்பெருக்கிகளில் அறிவித்துக் கொண்டே வலம்வந்தார்கள். போர்க்களத்தில் கூட செய்யக் கூடாத ஒரு அருவருப்பான காரியத்தினை நம் படையினர் மேற்கொண்டார்கள்.
இந்த வீடியோ வெளியாகி உலகம் முழுதும் மனித உரிமை செயல்பாட்டளர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். அந்த அதிகாரியை விசாரித்து தண்டிக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தன.
நம் அரசு என்ன செய்தது தெரியுமா? அந்த மாபெரும் மனித உரிமை மீறலைச் செய்த அந்த அதிகாரிக்கு விருது கொடுத்து கவுரவித்தது.
இப்போது சொல்லுங்கள் அந்த நிகழ்வைக் கண்டிக்காத யாருக்காவது ஜெனீவா ஒப்பந்தத்தினைப் பற்றிப் பேச தகுதி இருக்கிறதா?

- எழுதியவர் விவேகானந்தன் ராமதாஸ்

2 comments:

  1. Athan solra Indian blody thodai nadungi punnkku thinni kooli padai endu.

    ReplyDelete
  2. Beedi smoking Indian forces are not human, they are wild beast.

    ReplyDelete

Powered by Blogger.