Header Ads



இலங்கையின் நீளமான சுரங்கப் பாதையில், 8 ஆம் திகதி முதல் புகையிரதத்தில் பயணிக்கலாம்

இலங்கையின் நீளமான சுரங்கப் பாதையைக் கொண்ட  மாத்தறையிலிருந்து பெலிவத்த வரையிலான புகையிரத சேவை 8 ஆம் திகதி ஆரம்பம்

மாத்தறையிலிருந்து பெலிவத்த வரையிலான ரயில் சேவை அடுத்த மாதம் 8ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் டிலந்த பெரேரா தெரிவித்துள்ளார். 

இதற்கு அமைவாக, கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கிச் செல்லும் ரயில் அன்றைய தினம் முதல் பெலியத்த வரை சேவையை மேற்கொள்ளும். 

புத்தாண்டுக் காலப்பகுதியில் தமது சொந்த இடங்களுக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக விசேட ரயில் மற்றும் பஸ் சேவைகள் எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும் பொது முகாமையாளர் தெரிவித்தார். 

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வசதிகளைக் கொண்ட மற்றுமொரு ரயில் எஞ்ஜின் தற்போது கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

இலங்கையின் நீளமான சுரங்கப் பாதையையும் இங்கே தான் அமைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

M. Riswan Khalid 


1 comment:

  1. Sri Lanka railway should incorporate a new service in addition to the existing schedule.Railway authority should implement a new time table for southern bound train service to accommodate for the new service.

    ReplyDelete

Powered by Blogger.