Header Ads



சு.க.யின் 6 பேர், அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பார்களா..?

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்க தயாராகி வருவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இன்று (08) தகவல் வெளியிட்டுள்ளது.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக ஆர்.சம்பந்தனுக்கு பல சலுகைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொதுஜன பெரமுன குற்றம்சாட்டியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னாசன எம்.பிக்கள் ஜனாதிபதியின் நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இருப்பினும், எம்மால் அதனை வெற்றி கொள்ளச் செய்ய உதவி வழங்க ஒருபோதும் முடியாது என  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

எமக்குத் தெரியும். நிச்சயம் ஜனாதிபதியின் நிதி ஒதுக்கீடு தோற்கடிக்கச் செய்யப்படுவதில்லை. இதனை தோற்கடித்தால் என்ன நடக்கும் என்பதை பிரதமர் நன்கு அறிந்தே வைத்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 6 பேர் இணைந்து வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்க தயாராகி வருவதாக தம்மிடம் ஆதாரத்துடன் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.