Header Ads



என் பிள்ளையின் டியுசன் செலவு 65000, தரம் 5 இல் 193 புள்ளி பெற்ற நான் டியுசனுக்கு போகவில்லை

எனது பிள்ளையின் பிரத்தியேக வகுப்பிற்காக மாதாந்தம் 65, 000 ரூபா செலவிடுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் வரவு செலவுத் திட்டம் தொடர்பான குழுநிலை விவாதத்தில் இன்று -15- பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

1977ஆம் ஆண்டு திறந்த பொருளாதாரக் கொள்கையின் காரணமாகவே நாட்டில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் நான் 193 புள்ளிகள் பெற்றுக் கொண்டேன். அதற்காக நான் எந்தவொரு பிரத்தியேக வகுப்பிற்கும் சென்றது கிடையாது.

பிரத்தியேக வகுப்புப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் அல்லது அவ்வாறான ஆசிரியர்களை கல்வி அமைச்சு பணியில் அமர்த்திக் கொள்ள வேண்டுமெனவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.